Close Menu
    What's Hot

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்
    விளையாட்டு

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    Editor web2By Editor web2July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Litton Das
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்கதேச கிரிக்கெட் அணியின் அனுபவம் மிக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ், அந்த அணியின் ஒருநாள் (ODI) கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக இருந்த லிட்டன் தாஸ், தற்போது வங்கதேசத்தின் ஒயிட்-பால் (White-ball) கிரிக்கெட்டின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

    முன்னதாக ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த மெஹிதி ஹசன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அறிவித்துள்ளது. 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை அவர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2027 உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 14 அணிகள் பங்கேற்க உள்ளன.

    31 வயதான லிட்டன் தாஸ், 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு வங்கதேச அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் 3,356 ரன்கள் குவித்துள்ள அவர், 6 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் பதிவு செய்துள்ளார். 104 ஒருநாள் போட்டிகளில் 2,869 ரன்கள் எடுத்துள்ள லிட்டன், 5 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களைப் பெற்றுள்ளார். மேலும், 122 டி20 சர்வதேச போட்டிகளில் 2,702 ரன்கள் குவித்து 16 அரைசதங்கள் விளாசியுள்ளார்.

    புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டிருப்பது, 2027 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு வங்கதேச அணி புதிய கட்டத்தை நோக்கி முன்னேறுவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.

    BangladeshCricket cricket LittonDas ODICaptain
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!
    Next Article திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!
    Editor web2
    • Website

    Related Posts

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    July 29, 2026

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    July 29, 2026

    காமன்வெல்த் அரங்கில் இந்தியாவின் பதக்கப் பட்டியல்..!! யார் என்ன வென்றார்கள்?

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.