Author: Editor web3

கோடைக்காலத்தின் உச்சமான மே மாதம் தொடங்குவதற்கு முன்னரே, இந்திய துணைக்கண்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்ப அலையின் பிடியில் சிக்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள உலகளாவிய வெப்பநிலைப் பட்டியலின்படி, உலகின் மிகவும் வெப்பமான 100 நகரங்களில் 96 நகரங்கள் இந்தியாவில் இடம் பெற்றுள்ளன என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது. இதன் மூலம், தற்போது ஒட்டுமொத்த உலகிலேயே அதிக வெப்பம் நிலவும் நாடாக இந்தியா மாறியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் மூன்று இடங்கள் ‘அதீத வெப்பம்’ (Extreme Hot) நிலவும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொடும் முன்பே இத்தகையச் சூழல் நிலவுவது, வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் இன்னும் மோசமாக இருக்கும் என்பதையே காட்டுகிறது. இந்த கடுமையான வெப்பநிலை அதிகரிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. AQI.in தளத்தின் நேரடித் தரவுகளின்படி (Real-time data), உலகின் வெப்பமான 100 இடங்களின் பட்டியலில் சுமார் 96…

Read More

அபிமான நிறுவனங்கள் தயாரிக்கும் நேர்த்தியான ஆடைகளை உடுத்துவது இன்றைய வாழ்க்கையில் மக்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கின்றனர். மக்கள் தங்களது ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய நேரம் செலவிடுவதுடன், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக உடை உடுத்த ஏராளமான பணத்தைச் செலவிடவும் தயங்குவதில்லை. சக மனிதர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பதற்கான ஆசை மற்றும் உள்ளுணர்வு, அவர்களை அடிக்கடி மிகவும் விலையுயர்ந்த ஆடைகள், வாட்ச், நகைகளைத் தேர்வு செய்யத் தூண்டுகின்றது. அந்தவகையில், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியபோது, மைதானத்தில் கணவர் விராட் கோலியை உற்சாகப்படுத்த வந்திருந்த நடிகை அனுஷ்கா ஷர்மாவின் தோற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் அணிந்திருந்த பிரெஞ்சு பிராண்டான ‘Sézane’ நிறுவனத்தின் ‘Rodolfo’ ரக வெள்ளை நிற எம்பிராய்டரி மேலாடை (Blouse), எளிமையாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் இருந்தது. இதன் விலை சுமார் ரூ.17,000 ஆகும். மிகவும் சாதாரணமாகத் தெரிந்த இந்த ஆடையே…

Read More

மேற்காசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. போர் நிறுத்தம் மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் காரணமாக தற்போது இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு சீராகி வருகிறது. இந்த நிலையில் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒர் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. தென் மண்டல எல்.பி.ஜி சிலிண்டர் லாரி உரிமையாளர்களுக்கு ஐ.ஓ.சி நிறுவனம் ரூ.50 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது. நீண்ட காலமாக இந்த பாக்கியை வழங்க கோரி லாரி உரிமையாளர்களர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஐ.ஓ.சி நிறுவனம் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வில்லை. இதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஐ.ஓ.சி நிறுவன உயர் அதிகாரிகளுக்கு தென் மண்டல எல்.பி.ஜி சிலிண்டர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று…

Read More

நாடாளுமன்ற அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த (AAP) 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைவதற்கு மாநிலங்களவை தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மாநிலங்களவை ஆவணங்களில் இந்த 7 உறுப்பினர்களும் இப்போது பாஜக உறுப்பினர்களாகவே பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த இணைப்பின் மூலம், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. 7 எம்.பி.க்களை இழந்த ஆம் ஆத்மி கட்சியின் பலம் 10ல் இருந்து 3ஆக குறைந்தது. 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய ஆம் ஆத்மி கட்சி நேற்று துணைக் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 123 இடங்கள் பாஜகவுக்கு இப்போதைக்கு இல்லை. அதேசமயம் என்.டி.ஏ. கூட்டணிக்கு 140 எம்.பிகளுக்கு மேலான ஆதரவு உள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா, “கட்சியின் தவறான செயல்களில் ஒரு பகுதியாக இருக்க விரும்பாததால்…

Read More

தமிழகத்தில் கோடை காலத்தின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்களை வெப்ப அலையில் இருந்து காக்கத் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, மாநிலத்திலுள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) எனப்படும் வெப்பவாத பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்கத் தனிச் சிறப்பு வார்டுகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் ஏற்கனவே உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால், அவர்களுக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க, அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, ஆரம்பச் சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நல மையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ் (ORS) கரைசல் தடையின்றி வழங்கப்பட…

Read More

காலன் வாசலில் காத்திருக்கும் வேளையிலும், தனது பச்சிளம் மகனுக்காகத் துயரத்தை மறைத்து அன்பு பாராட்டும் தாய் ஒருவரின் நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புற்றுநோயின் இறுதி நிலையில், உயிர் பிரியும் தருவாயில் இருப்பதை அறிந்தும், அந்தத் தாய் தனது வேதனையைச் சிறிதும் காட்டிக்கொள்ளாமல் மகனுடன் சிரித்துப் பேசி விளையாடுவது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இந்த வீடியோ எங்கு, எப்போது படமாக்கப்பட்டது என்ற துல்லியமான விவரங்கள் இல்லை என்றாலும், ஒரு தாயின் பாசம் மரணத்தின் பயத்தை விடவும் வலிமையானது என்பதை உலகுக்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது. https://x.com/HumanityChad/status/2047731356776763445? மருத்துவமனை படுக்கையில் உயிருக்குப் போராடும் நிலையிலும், தனது மகனைப் பார்த்தவுடன் அந்தத் தாயின் முகத்தில் தோன்றும் புன்னகை அன்பின் உன்னதத்தை வெளிப்படுத்துகிறது. தனது வாழ்நாள் முடிந்து கொண்டிருப்பதை உணர்ந்த அவர், எஞ்சியிருக்கும் ஒவ்வொரு நொடியையும் தனது மகனுடன் மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்புவது அந்த வீடியோவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது. தனது தாய்க்கு…

Read More

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் சாடியோ கமாராவை (Sadio Camara) குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். தலைநகர் பமாகோவுக்கு அருகிலுள்ள ‘காட்டி’ (Kati) நகரில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தின் மீது, தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரைச் செலுத்தி இந்தத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் அமைச்சர் சாடியோ கமாரா மட்டுமின்றி, அவரது இரண்டாவது மனைவியும் கொல்லப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். அமைச்சரின் இல்லத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும், அதில் காயமடைந்த அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் வெறும் அமைச்சரின் இல்லத்துடன் மட்டும் நின்றுவிடாமல், மாலி நாடு முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த பயங்கரவாதத் தாக்குதலாக உருவெடுத்துள்ளது. தலைநகர் பமாகோ உட்பட செவரே, கிடால் மற்றும் காவ் போன்ற முக்கிய நகரங்களிலும் ஒரே நேரத்தில் தீவிரவாதக் குழுக்கள்…

Read More

த.வெ.க. தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் விஜய், தனது வேட்புமனுவில் மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக ஆய்வு செய்யக் கோரி பெரம்பூரைச் சேர்ந்த வாக்காளர் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே இதே போன்ற கோரிக்கையுடன் வந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது. மனுதாரர் தனது புகாரில், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையே விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், அவருக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாக வழங்கியதாகக் கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒரு தனியார் கல்வி அறக்கட்டளைக்கு விஜய் ரூ.20 கோடி வழங்கியது குறித்து முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை…

Read More

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில், தேசிய திருநங்கை கூட்டமைப்பு சார்பில் ‘மிஸ் திருநங்கை 2026’ அழகிப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. கூவாகம் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. விழாவின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த 25 சாதனைத் திருநங்கைகளுக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் நடிகை அர்ச்சனா, கானா வினோத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் இந்தப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முதற்கட்டமாக 12 பேர் களமிறங்கிய நிலையில், அவர்களின் திறமை மற்றும் ஆளுமையின் அடிப்படையில் 5 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியின் முடிவில், சென்னையைச் சேர்ந்த திருநங்கைகளே முதல் மூன்று இடங்களையும் ஒட்டுமொத்தமாகத் தட்டிச்…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 27) அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களின் எதிரொலியாக, தமிழகத்தில் சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.14,230-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் ஏறுமுகத்தை நோக்கிச் செல்வது நகை வாங்குவோரைச் சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது. நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100- உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.800-ம், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது. இன்று காலை சர்வதேச சந்தையில் தங்கம்…

Read More