Author: Editor web3

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கான அதிகாரப்பூர்வ நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 30-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9:52 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, மே 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11:08 மணிக்கு நிறைவடைகிறது. இந்த புண்ணிய கால இடைவெளியில் பக்தர்கள் 14 கிலோமீட்டர் நீளம் கொண்ட கிரிவலப் பாதையில் வலம் வந்து ஈசனை தரிசிக்க உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி வார இறுதி நாட்களை ஒட்டி வருவதால், சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணிக்காக சுமார் 10,000 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில்…

Read More

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், வாக்குப்பதிவை தொடர்ந்து மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்தநிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் சில தொகுதிகளில் திமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாகவே கோவையில் முகாமிட்டு வியூகங்களை வகுத்த அவர், சில குறிப்பிட்ட தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் சுணக்கம் காட்டியதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து மிகுந்த அதிருப்தியில் உள்ளாராம். குறிப்பாக, வாக்காளர்களுக்குச் சென்றடைய வேண்டிய ‘முக்கிய கவனிப்புகள்’ (பணம்) முறையாக விநியோகிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய, தற்போது குழு அமைத்து ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாகவே, தேர்தல் நாளன்று அவர் தனது சொந்த ஊரான கரூருக்குச் சென்று வாக்களிக்கக் கூட நேரமில்லாமல் கோவை தெற்கு தொகுதியிலேயே முகாமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கோவையின் கள நிலவரம் தமக்குச் சாதகமாக இல்லை என்பதைக் கணித்த அவர்,…

Read More

டெல்லியில் நடைபெற்ற இந்தியத் துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் (NRAI) 75-வது ஆண்டு நிறைவு விழாவில், ஒலிம்பிக் பதக்க நாயகி மனு பாக்கரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, இந்திய விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தையும் சமூக வலைதளங்களில் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. ஒலிம்பிக் சாதனையாளர்களைக் கௌரவிப்பதற்காக ஒதுக்கப்பட்ட அந்த மேடையில், சம்பந்தமே இல்லாமல் 15 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். சமீபத்தில் ஐபிஎல் (IPL) ஏலத்தில் கவனம் ஈர்த்த வைபவ் பற்றி மனு பாக்கரின் கருத்து என்ன என்பதே அந்த கேள்வி. பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த ஒரு வீராங்கனையிடம், அவரது சாதனைகளைக் கொண்டாட வேண்டிய இடத்தில் கிரிக்கெட் குறித்துப் பேசச் சொன்னது ரசிகர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. https://x.com/PTI_News/status/2048741874358431822?  மனு பாக்கரின் பதில்: இந்தத் தேவையற்ற கேள்வியால் சற்றும் நிலைகுலையாத மனு பாக்கர், தனது வழக்கமான…

Read More

நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் காயங்களால் தவித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, தற்போது ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளது. அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு புதிய இளம் வீரரைத் தேர்வு செய்ய சிஎஸ்கே நிர்வாகம் ‘மிட்-சீசன்’ சோதனைகளை (Trials) தொடங்கியுள்ளது. இதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த 21 வயதான இளம் ஆல்-ரவுண்டர் ஆயுஷ் வர்தக் (Ayush Vartak) சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 27 அன்று சென்னை வந்தடைந்த அவர், இன்று (ஏப்ரல் 28) தனது திறமையை நிரூபிக்க சோதனைகளில் பங்கேற்கிறார். ஆயுஷ் வர்தக் இதுவரை சீனியர் லெவல் கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும், ஜூனியர் கிரிக்கெட்டில் ஒரு அதிரடி வீரராகப் பெயரெடுத்தவர். மும்பை யு-23 அணியின் கேப்டனாக இருந்த இவர், கடந்த சி.கே. நாயுடு டிராபியில் 9 போட்டிகளில் 770 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், 2025…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான கே.ஏ. செங்கோட்டையனுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையைச் சரியாகக் கையாள்வது குறித்து கட்சித் தலைவர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்று எக்சிட் போல் (Exit Poll) முடிவுகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் தவெக வேட்பாளர்களும் முகவர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை செங்கோட்டையன் விஜயிடம் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. மூத்த அரசியல்வாதியான அவரது அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வாக்கு எண்ணிக்கை கண்காணிப்புப் பணிகளுக்கான இடைக்காலக்…

Read More

மும்பை பைதோனி பகுதியில் பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள முகால் கட்டிடத்தில் வசித்து வந்த அப்துல்லா டோக்காடியா (40), அவரது மனைவி நஸ்‌ரீன் (35) மற்றும் அவர்களது மகள்களான ஆயிஷா (16), ஜைனாப் (13) ஆகியோர் சனிக்கிழமை இரவு தங்கள் வீட்டில் நடைபெற்ற விசேஷத்தில் கலந்துகொண்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். விருந்துக்கு பிறகு அவர்கள் அனைவரும் தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. உணவு உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, நான்கு பேருக்கும் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் அவர்களுக்குத் தலைச்சுற்றல், வயிற்று வலி மற்றும் தொடர் வாந்தி ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை மகள்கள் இருவரும் சுயநினைவின்றி மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவர்களை உடனடியாக ஜே.ஜே. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஒரு சிறுமி…

Read More

மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த கையோடு, சிக்கிம் மாநிலத் தலைநகர் கேங்டாக்கிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிக்கிமின் 50-வது மாநில தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கச் சென்ற பிரதமர், அங்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் கலாச்சார ஊர்வலம் (Roadshow) மேற்கொண்டார். பின்னர், அங்குள்ள இளம் நண்பர்களுடன் மைதானத்தில் கால்பந்து விளையாடினார். மேற்கு வங்கத்தில் கால்பந்து என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார உணர்வாகும். கடந்த 2021 தேர்தலின் போது மம்தா பானர்ஜியின் “கேலா ஹோபே” (ஆட்டம் ஆரம்பம்) என்ற முழக்கம் கால்பந்தை மையப்படுத்தியே அமைந்தது. அந்த வகையில், வங்காளத் தேர்தல் சமயத்தில் பிரதமரின் இந்த கால்பந்து விளையாட்டு, அரசியல் ரீதியாகவும் ஒரு முக்கியச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. https://x.com/narendramodi/status/2048971961653735629? இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர்…

Read More

நடப்பு ஐபிஎல் 2026 தொடரின் நேற்று நடைபெற்ற 39-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி பெங்களூருவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. வெறும் 75 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. தொடர்ந்து விளையாடிய நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, 6.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி தனது ஆதிக்கத்தை நிரூபித்தது. இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஜாம்பவான் அணிகளின் சாதனைப் பட்டியலில் ஆர்.சி.பி இணைந்தது. டெல்லி அணிக்கு எதிராக ஆர்.சி.பி பெறும் 21-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில்…

Read More

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஷம்பு-அம்பாலா ரயில் தடத்தில், திங்கள்கிழமை இரவு பயங்கர குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்தது. சரக்கு ரயில்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்தத் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைக்க முயன்ற நபர், எதிர்பாராதவிதமாக அது வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். சுமார் இரவு 10 மணியளவில் நடந்த இந்த வெடிப்புச் சம்பவத்தால் ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாட்டியாலா எஸ்.எஸ்.பி வருண் சர்மா மற்றும் டி.ஐ.ஜி தலைமையிலான உயர்மட்ட போலீஸ் குழுவினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு வெடித்த வேகத்தில் அந்த நபரின் உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து ஒரு சிம் கார்டு மற்றும் சில தடயங்களைச் சேகரித்துள்ள தடயவியல் நிபுணர்கள், தொழில்நுட்ப ரீதியான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் சிர்ஹிந்த் பகுதியில் இதே போன்றதொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், தற்போது மீண்டும்…

Read More

கிர்ஜிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜுன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர். இந்த உயர்மட்ட சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய பாதுகாப்பு, எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுதல் மற்றும் இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு சேனல்களை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள உண்மைக் கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், இரு நாடுகளும் தங்கள் உறவை மேம்படுத்தவும், எல்லைப் பதற்றத்தைக் குறைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அதன் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படும் இந்த…

Read More