Close Menu
    What's Hot

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பிரியாணி சாப்பிட்ட பின் தர்பூசணி உட்கொண்ட 4 பேர் பரிதாப பலி!. மும்பையில் சோகம்!
    இந்தியா

    பிரியாணி சாப்பிட்ட பின் தர்பூசணி உட்கொண்ட 4 பேர் பரிதாப பலி!. மும்பையில் சோகம்!

    Editor web3By Editor web3April 28, 2026Updated:April 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    briyani dead
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மும்பை பைதோனி பகுதியில் பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள முகால் கட்டிடத்தில் வசித்து வந்த அப்துல்லா டோக்காடியா (40), அவரது மனைவி நஸ்‌ரீன் (35) மற்றும் அவர்களது மகள்களான ஆயிஷா (16), ஜைனாப் (13) ஆகியோர் சனிக்கிழமை இரவு தங்கள் வீட்டில் நடைபெற்ற விசேஷத்தில் கலந்துகொண்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். விருந்துக்கு பிறகு அவர்கள் அனைவரும் தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

    briyani dead 1

    உணவு உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, நான்கு பேருக்கும் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் அவர்களுக்குத் தலைச்சுற்றல், வயிற்று வலி மற்றும் தொடர் வாந்தி ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை மகள்கள் இருவரும் சுயநினைவின்றி மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவர்களை உடனடியாக ஜே.ஜே. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஒரு சிறுமி உயிரிழக்க, சிகிச்சை பலனின்றி மற்றொரு சிறுமியும் மரணமடைந்தார். சோகம் நீங்கும் முன்பே, சில மணி நேர இடைவெளியில் பெற்றோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் 12 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மரணமடைந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையில் இது ‘உணவு நச்சு’ (Food Poisoning) காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். அவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதேனும் நச்சுத்தன்மை இருந்ததா அல்லது பிரியாணிக்கு பின் தர்பூசணி சாப்பிட்டதால் ஏற்பட்ட ரசாயன மாற்றமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வீட்டில் மீதமிருந்த தர்பூசணித் துண்டுகளைக் கைப்பற்றியுள்ள போலீசார், அவற்றை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிக்கிய இலங்கை கடற்கொள்ளையன் ; கூட்டாளிகளைப் பிடிக்குமா இந்திய அரசு?
    Next Article மீண்டும் ரீ-ரிலீசாகும் பில்லா..! புதிய டிரெய்லர் வெளியீடு..!
    Editor web3
    • Website

    Related Posts

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    July 5, 2026

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    July 5, 2026

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.