Close Menu
    What's Hot

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    Featured

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 finance
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே,  தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவரின் குழந்தைகளை நிதி நிறுவன ஊழியர்கள் அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அவர்கள் சமையல் கேஸ் சிலிண்டரையும் தூக்கிச் சென்றுள்ளனர்.

    மல்லணம்பட்டி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமு. இவருக்கு சசிகலா (45)   என்ற மனைவியும் தேவதர்ஷன் (19) என்ற மகனும், ரித்திகா (17)  என்ற மகளும் உள்ளனர்.

    இதில் ரித்திகா அந்த பகுதியில்  உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சசிகலா மகளிர் சுய உதவி குழு மூலம் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 40 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். கடந்த மாதம் இப்பகுதியில்  பெய்த கனமழை காரணமாக இவரது வீடு சேதம் அடைந்திருந்ததால், அந்த கடன் தவணைத் தொகையை சசிகலா கட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.

    இதனால், ஆத்திரமடைந்த வத்தலக்குண்டு தனியா நிதி நிறுவன ஊழியர்கள் அழகாபுரியில் உள்ள சசிகலா வீட்டுக்கு சென்று, கடந்த வாரம் அவரது மகன் தேவதர்ஷனை அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் அலுவலகத்தில் தங்க வைத்து பின்னர் வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். நேற்று பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்த சசிகலாவின் மகள் ரித்திகாவை அந்த நிதி நிறுவன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மதியம்  வரை உட்கார வைத்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுள்ளனர்.

    கடன் தவணை தொகை செலுத்தாத காரணத்திற்காக மகன், மகளை அழைத்துச்சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டில் சமையலுக்காக பயன்படுத்த வைத்திருந்த கேஸ் சிலிண்டரை தூக்கிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பள்ளி செல்லும் மாணவியை கடன் தவணை செலுத்தவில்லை என்பதற்காக  அழைத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவரது குடும்பத்தார் தமிழ்நாடு அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

    17-Year-Old Girl Government Action Loan Recovery Mother's Loan Private Finance
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு
    Next Article ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி
    Editor TN Talks

    Related Posts

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    July 5, 2026

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    July 5, 2026

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.