Author: editor5

நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஜனநாயகன்’ வரும் ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருந்த இப்படம், பல்வேறு தயாரிப்பு சவால்களை எதிர்கொண்டு தாமதமாகி, இறுதியாக ஜூலை 23-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தானே படத்தின் புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ப்ரோமோவில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜயின் தோற்றம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கோட்-சூட் அணிந்து அதிகாரப்பூர்வமான தோற்றத்தில் காட்சியளிக்கும் விஜய், சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் பாணியில் கை உயர்த்தி ‘செய்கை’ செய்த காட்சியை போல் வீடியோவிலும் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த…

Read More

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, மாநில அரசின் அனைத்து நிர்வாகப் பணிகளிலும் தாய்மொழியான பெங்காலியை கட்டாயமாக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 1, 2026 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என அவர் தெரிவித்தார். குடிமக்கள் சேவைகள், டிஜிட்டல் தளங்கள், விண்ணப்பப் படிவங்கள், சான்றிதழ்கள், அரசு இணையதளங்கள், மொபைல் செயலிகள், பொது அறிவிப்பு பலகைகள், பத்திரிகை வெளியீடுகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளிலும் பெங்காலி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை சார்ந்த முதல் தகவல் அறிக்கைகள் (FIR), புகார் தீர்வு, குடிமக்கள் தரவு பாதுகாப்பு, பொது விழிப்புணர்வு செய்திகள் போன்ற சட்டம் ஒழுங்கு தொடர்பான சேவைகளிலும் பெங்காலி கட்டாயமாக்கப்படும். இந்த அறிவிப்பை டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்த நாள் விழாவையொட்டி வெளியிட்ட முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, “இந்திய மொழிகளைப் பாதுகாத்து, மேம்படுத்தி, நிர்வாகம், கல்வி மற்றும் பொது வாழ்வில்…

Read More

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று காலை கைது செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து திமுகவினர் உடனடியாகக் களமிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்தக் கைதை “உச்சகட்ட அடக்குமுறை” என வன்மையாகக் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதாகத் தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிகாலையிலேயே அவரது இல்லத்துக்கு சென்று கைது செய்தனர். கைதுக்குப் பிறகு அவர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். கோவில்பட்டியிலும் திமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தமிழக அரசுக்கு எதிராக” கோஷங்கள் எழுப்பிய அவர்கள், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை உடனடியாக…

Read More

தமிழகத்தில் வீட்டு மின்சார நுகர்வோருக்கு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதங்களை விட இரு மடங்கு, மூன்று மடங்கு அதிகமான பில்கள் வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என அரசு அறிவித்திருந்த நிலையிலும், பலருக்கு எதிர்பாராத அளவில் உயர்ந்த கட்டணம் வந்துள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் 300 ரூபாய் அளவில் வந்த பில் இந்த மாதம் 800 ரூபாய்க்கு மேல் சென்றுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்சினை ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மிகவும் பாதித்துள்ளது. இந்நிலையில், நெல்லை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் ஒரு சுற்றறிக்கையில், மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறையில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக சில பகுதிகளில் தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ ஒப்புதல் மக்களிடையே மேலும்…

Read More

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தொண்டர்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 20-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த அமைதியான போராட்டம், இன்று பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகையிட திட்டமிட்டிருந்த CJP தொண்டர்களின் அழைப்புக்கு நாடு முழுவதிலும் இருந்து 20,000-க்கும் மேற்பட்டவர்கள் டெல்லியில் குவிந்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை ஷபானா ஆஸ்மி, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகங்கள் போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்தப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு…

Read More

ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் விலை தொடர்ந்து உயர்வில் உள்ளது. பொதுவாக ஆடி மாதத்தில் அம்மன் மற்றும் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால், அசைவ உணவு உட்பட மீன் உட்கொள்வதை பலர் தவிர்ப்பது வழக்கம். இதனால் மீன் தேவை குறைந்து விலையும் வீழ்ச்சியடையும். ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்ப்புக்கு மாறாக விலை உயர்வு தொடர்கிறது. இது உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து ஒரு மாதம் ஆகியும், கடந்த மூன்று வாரங்களாக காசிமேடு துறைமுகத்தில் மீன் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு சில விசைப்படகுகள் மட்டுமே ஆழ்கடலுக்குச் சென்று திரும்புகின்றன. ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆயிரக்கணக்கான மீன் பிரியர்கள் அதிகாலையிலேயே துறைமுகத்துக்கு வந்து குவிந்தனர். நூற்றுக்கணக்கான படகுகள் வந்தபோதிலும், சந்தையில் போதுமான மீன் வரத்து இல்லாததால்…

Read More

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், தலைநகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ‘பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தப் பதற்றத்திற்கு முக்கியக் காரணம், ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பு சார்பில் நடத்தப்படும் பிரம்மாண்ட போராட்டம்தான். நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும், இன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ‘சலோ சன்சாத்’ முற்றுகைப் போராட்டத்தை அந்த அமைப்பு அறிவித்திருந்தது. டெல்லி காவல்துறை இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சச்சின் சர்மா தனது சமூக ஊடகப் பக்கத்தில், “இந்தப் போராட்டத்திற்கு எந்த அனுமதியும் கோரப்படவில்லை, வழங்கப்படவும் இல்லை” என்று தெளிவாகத் தெரிவித்தார்.…

Read More

டெல்லி கேப்பிட்டல்ஸ் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அபிஷேக் போரல் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளது கொல்கத்தா உயர் நீதிமன்றம். ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள மக்ரா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வு, அபிஷேக் போரலை உடனடியாக கைது செய்யுமாறு மக்ரா போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும், அவரிடம் உள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் கைப்பற்றி பரிசோதிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கைது நடவடிக்கைக்குப் பின் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகள் குறித்து வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின்படி, அபிஷேக் போரல் காதல் என்ற பெயரில் அவரை அணுகி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் தனியாக…

Read More

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீது அவதூறாகவும் மிரட்டும் தொனியிலும் பேசியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அவர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (பி.என்.எஸ்) மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் BNS 351(3) – கடுமையான குற்ற மிரட்டல், BNS 352 – அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்ட அவமதிப்பு, BNS 353(2) – சமூகங்களிடையே பகைமையைத் தூண்டும் பொய்யான தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகள் அடங்கும். தவெக கட்சியின் சார்பில் கரூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்கு பதிலடியாக மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசியதே இந்த நடவடிக்கைக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற சபாநாயகரும், திமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான அப்பாவு இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர்…

Read More

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் நடைபெற்ற கேள்வித்தாள் கசிவு மற்றும் பெரும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சி முன்னதாக அறிவித்திருந்தது. இதனால் டெல்லி போலீஸார் உஷார் நிலையில் இருந்தனர். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு ஐந்து மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. புதுடெல்லி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு (Section 144) அமல்படுத்தப்பட்டது. முன் அனுமதி பெற்ற ஜந்தர் மந்தர் தவிர பிற இடங்களில் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை முன்னதாகவே இந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்திருந்தது. தடை உத்தரவுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.…

Read More