Author: editor5

கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவராகவும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் அழியாத முத்திரை பதித்தவராகவும் விளங்கிய கலைஞரின் பிறந்தநாள், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களால் நினைவுகூரப்படும் முக்கிய நாளாக மாறியுள்ளது. 1924 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி பிறந்த கலைஞர் கருணாநிதி, தமிழ் சினிமா உலகில் எழுத்தாளராக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் அரசியல் களத்தில் முன்னணி தலைவராக உயர்ந்தார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், சமூக நீதி, கல்வி முன்னேற்றம், பெண்கள் நலன், ஏழை மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் முக்கியமான திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மேலும் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காக அவர்…

Read More

நில எடுப்பு பணிகள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள், இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கை தயார் செய்து முதலமைச்சர் விஜய்யிடம் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் தமிழ்நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்பட்டது. முந்தைய திமுக ஆட்சியில் 5,600 ஏக்கர் பரப்பளவில் இந்த மிகப்பெரிய திட்டம் தீட்டப்பட்டது. தற்போது சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் தினசரி 60,000க்கும் அதிகமான பயணிகளையும், 400க்கும் மேற்பட்ட விமானங்களையும் கையாள்கிறது. பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதால், ஏற்கெனவே நெரிசல் மிகுந்துள்ள மீனம்பாக்கத்திற்கு மாற்றாக பரந்தூர் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தைச் சுற்றி நவீன சரக்குக் கிடங்குகள், ஏற்றுமதி-இறக்குமதி மையங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் உயர்தர ஹோட்டல்கள் அடங்கிய ‘ஏரோட்ரோபோலிஸ்’ நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதன் மூலம் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருமளவில் அதிகரிக்கும்…

Read More

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பொருட்களின் உற்பத்தி, பதுக்கல், விநியோகம், போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடை வரும் 2027 மே 23-ம் தேதி வரை அமலில் இருக்கும். உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருளாகக் கொண்ட அனைத்து பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இந்தப் பொருட்களைத் தயாரிப்பது, சேமித்து வைப்பது, எங்கும் கொண்டு செல்வது, விநியோகிப்பது அல்லது விற்பனை செய்வது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். கடந்த 2013-ம் ஆண்டு முதல் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. புகையிலைப் பொருட்கள் உடல்நலத்துக்கு மிகுந்த கேடு விளைவிப்பதால், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே அவை…

Read More

பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? தூத்துக்குடி: வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று, மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பெண்கள் பாதுகாப்பு குறித்த கடும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அருகே வசிக்கும் 33 வயது இளம்பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த 29 வயது பாலமுருகன் என்பவர் தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது ஜெயபால் தவெக நிர்வாகி ஆவார்.…

Read More

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார் அண்ணாமலை. தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே. அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக வெளியான தகவல்கள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜகவின் தேசியத் தலைவரிடம் தனது விலகல் கடிதத்தை அண்ணாமலை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. அமித் ஷா சந்திப்பின்போது, தமிழக பாஜகவுக்குள் நிலவும் உள்கட்சி பிரச்னைகள், தனக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை அவர் விரிவாக எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு, அண்ணாமலையின் எதிர்கால அரசியல் பாதையைத் தீர்மானிக்கும் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய அண்ணாமலை, 2011-ம் ஆண்டு…

Read More

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிந்து விலகினார். டெல்லியில் கட்சி தலைவர் நிதின் நபினிடம் ராஜினாமா கடிதம் அளித்தார். தமிழக அரசியல் களத்தில் எதிர்பாராத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை. டெல்லியில் கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதத்தை தூண்டியுள்ளது. 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, குறுகிய காலத்திலேயே மாநில அளவில் முக்கிய முகமாக உருவெடுத்தார். 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அவர், “என் மண், என் மக்கள்” நடைபயணம் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான கவனத்தை ஈர்த்தார். தி.மு.க. அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து, இளைஞர்கள் மற்றும் ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.…

Read More

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் இன்று பதிவியேற்றுக்கொண்டனர். இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இன்று (ஜூன் 2, 2026) பதிவாகியுள்ளது. கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா உள்ளிட்ட ஐந்து புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நியமனங்கள் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பலத்தை அதிகரிப்பதோடு, பெண் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. புதிய நீதிபதிகளில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் நபர் கோவை வழக்கறிஞர் வி. மோகனா. 1966 ஜூன் 27ஆம் தேதி பிறந்த இவர், 1988ஆம் ஆண்டு கோவை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். 1996ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அட்வகேட்-ஆன்-ரெக்கார்டாக பதிவு செய்யப்பட்ட இவர், 2015ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக உயர்த்தப்பட்டார். பல உயர்மட்ட வழக்குகளில் திறமையுடன் வாதாடியுள்ள மோகனா, இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர…

Read More

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதனை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கும்படி கோரிக்கை விடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜயை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் இன்று (ஜூன் 2) சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த சந்திப்பு, தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில், தேசியக் கட்சியின் முக்கிய தலைவரின் முதல் சந்திப்பாக கவனம் பெற்றுள்ளது. காலை நேரத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, சிதம்பரம் முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து அளித்து, பொறுப்பேற்றதற்கான வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதிகாரப்பூர்வமாக இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்பட்டாலும், இரு தலைவர்களும் தமிழக அரசியல் சூழல், புதிய அரசின் நிர்வாகக் கொள்கைகள், மக்கள் நலன் சார்ந்த…

Read More

வருமான வரி வழக்கில் முதல்வர் விஜய் மீது குற்றவழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்திருந்த இந்த மனு, மனுதாரரே வாபஸ் பெற்றதால் நீதிமன்றம் நிராகரித்தது. நடிகராக இருந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு எதிராக வருமான வரித்துறை சார்ந்த புகார் ஒன்று பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. 2015-2016 நிதியாண்டில் அவர் தனது மொத்த வருமானத்தை ₹35 கோடி 42 லட்சமாக மட்டுமே வருமான வரி கணக்கில் காட்டியிருந்தார். ஆனால், அதே ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியபோது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படமான ‘புலி’க்காக பெற்ற ₹15 கோடி வருமானம் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில், வருமான வரித்துறை 2022 ஜூன் மாதம் விஜய்க்கு ₹1.50 கோடி…

Read More

மூன்று இடங்களில் ரேடார் கருவிகள் மூலம் மழையின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செயல்படும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் விஜய்யின் நேரடி அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தினசரி அடிப்படையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். “முதலமைச்சரின் கனவுப்படி தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று அவர் கூறினார். தற்போது அந்தமானில் ஒரு வாரமாக தொடர்ச்சியான மழை பெய்து வரும் நிலையில், கேரளாவிலும் மழை தொடங்கியுள்ளது. இதன் தாக்கம்…

Read More