சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருட்களில் தற்பொழுது நுடெல்லா சாக்லேட் ஸ்பிரெட் சேர்ந்துள்ளது. இத்தாலியில் ஃபெர்ரெரோவால் தயாரிக்கப்படும் பிரபலமான ஹேசல்நட் மற்றும் கோகோ ஸ்ப்ரெட், இந்த இரண்டு பொருட்களின் கலவைதான் தான் நுடெல்லா. சர்க்கரை, பாமாயில், ஹேசல்நட்ஸ், ஸ்கீம் பால், கோகோ, லெசித்தின் மற்றும் வெண்ணிலின் (ஒரு செயற்கை சுவை) ஆகியவை ஏழு பொருட்கள் அடங்கிய கலவைதான் இந்த நுடெல்லா கலவை.

இதனுடைய ஊட்டச்சத்து விபரத்தை பற்றி பார்ப்போம் :
( 2 டேபிள்ஸ்பூன் நுடெல்லாவின் ( 30-37 கிராம்) ஊட்டச்சத்து விபரம் )
- கலோரிகள் : 200
- கொழுப்பு : 11 கிராம் (நிறைவுற்ற கொழுப்பு: 3.5 கிராம்)
- சோடியம் : 15 மி.கி
- கார்போஹைட்ரேட் : 22 கிராம் (நார்ச்சத்து: 1 கிராம், சர்க்கரை: 21 கிராம்)
- புரதம் : 2 கிராம்
ஹேசல்நட்ஸ் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளன. கூடுதலாக, கோகோவுடன் சுவைக்கப்படும் நுடெல்லாவில் ஃபிளாவனாய்டுகளும் உள்ளன.அவை இதயத்திற்கு ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றிகளாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் :
மேல் கூறிய ஊட்டச்சத்து விபரத்தை நீங்கள் உற்றுப் பார்த்தால் 37 கிராம் நுடெல்லா கலவையில் 21 கிராம் சர்க்கரை இருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக பெண்கள் 24 கிராம் சர்க்கரையும் ஆண்கள் 36 கிராம் சர்க்கரையும் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
ஆனால் இங்கு இரண்டு டேபிள் ஸ்பூன் நுடெல்லா கலவையை உண்டு விட்டாலே அதில் 21 கிராம் சர்க்கரை அளவு நமக்கு கிடைத்துவிடும். மேலும் அதில் 200 கலோரிகள் வேறு உள்ளது. எனவே இதில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை அளவு உடலுக்கு நல்லதல்ல என்பதுதான் உண்மை.

இந்த நுடெல்லா கலவையை நீங்கள் உண்ணக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. இதை தினசரி உணவாக கருதி அவ்வப்போது எடுத்து உண்பதை நிச்சயமாக நீங்கள் தவிர்க்க வேண்டும். இந்த நுடெல்லா கலவையை எப்பொழுதாவது, உதாரணத்திற்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது அதிகபட்சம் இரண்டு முறை அதிகபட்சம் ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் மட்டுமே எடுத்துக் கொள்வது நல்லது.

நுடெல்லாவை எப்படி சாப்பிடலாம்
கோதுமை பிரட், கோதுமை ரொட்டி, பழங்கள் நிறைந்த ஓட்ஸ் கலவை என அதிகம் நார்ச்சத்து உள்ள உணவுகளில் மேற்கூறியபடி ஒன்று அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன்கள் மட்டும்( ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் மட்டுமே) சேர்த்து சாப்பிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கையும் விளைவிக்காது. முக்கியமாக இரவு நேரத்தில் உண்ணாமல் காலை அல்லது மதிய நேரத்தில் உண்பது நல்லது.
https://youtu.be/idtmiGzCmkY?si=XJESCYsPzT_LAdfJ

