Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அகமதாபாத் விமான விபத்து பலி எண்ணிக்கை 274 ஆக அதிகரிப்பு..
    இந்தியா

    அகமதாபாத் விமான விபத்து பலி எண்ணிக்கை 274 ஆக அதிகரிப்பு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2025Updated:June 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    02 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.

    அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் காட்விக் நகரை நோக்கி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், மேகானி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் உணவு விடுதியில் மோதி பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிழம்புடன் பற்றி எரிந்தது.

    இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகள், 10 பணியாளர்கள், 169 இந்தியர்கள் 52 இங்கிலாந்து நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டினர், கனடாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 241 பேர் விபத்தில் உடல்கருகி உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் மட்டும் உயிர்தப்பினார்.
    இதேபோன்று உணவு விடுதி மற்றும் குடியிருப்புகளைச் சேர்ந்த சிலரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
    10 மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமா? கவனக்குறைவா? உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள், நிவாரணப் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்து விட்டன. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு காப்புரிமை பெறும் வகையில் விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகல்லூரிகளில் ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர்… இதுதான் திமுகவின் சமூக நீதியா? – அன்புமணி கேள்வி
    Next Article தவெக தலைவர் விஜயுடன், ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் சந்திப்பு
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    June 3, 2026

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    June 3, 2026

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.