Close Menu
    What's Hot

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதலமைச்சர் புகாரும், அண்ணாமலை மறுப்பும்…
    தமிழ்நாடு

    முதலமைச்சர் புகாரும், அண்ணாமலை மறுப்பும்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin annamalai 065212183 16x9 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய அரசின் பல திட்டங்களுக்கு மாநில அரசுகள் அதிக அளவில் நிதிப்பங்கீடு தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த செய்தி..

    பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!

    படையப்பா படக் ‘காமெடி’ போல “மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும்.

    அது நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது..

    இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ₹5,47,280 கோடி நிதி, மத்திய அரசு வழங்கியுள்ளது.

    உண்மை இப்படி இருக்க, முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக, ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி, அதைக் கொண்டு வந்தால், மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

    கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது.

    Annamalai denial response BJP DMK clash MK Stalin complaint on BJP Stalin vs Annamalai Tamil Nadu political controversy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி கைதா?.. 100-க்கான ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு..
    Next Article நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 6 தமிழர்கள்..
    Editor TN Talks

    Related Posts

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.