Close Menu
    What's Hot

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை : 50 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்… திறந்து வைத்தார் முதலமைச்சர்…
    தமிழ்நாடு

    சென்னை : 50 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்… திறந்து வைத்தார் முதலமைச்சர்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 18, 2025Updated:June 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    17 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    சென்னையில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அடிப்படையான குடிநீர் தேவையும் உயர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில் சென்னையில் தினசரி 1,100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. பொது மக்கள் பயன்பாட்டுக்கு லாரிகள் வழியாகவும், வீடுகளுக்கு குழாய் வழியாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய உள்ளது.

    இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் முதல் கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து அமைத்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி பகுதிகள், மார்க்கெட் பகுதிகள் என்று 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    18 3

    இந்த ஏடிஎம்களை பொறுத்த வரையில் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களின் வாட்டர் பாட்டிகளில் தண்ணீரை பிடித்து பருகும் வகையில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கு 250லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் டாங்குகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஏடிஎம்கள் மூலம் வழங்கப்படுகிறது.

    இந்த எம்டிஎம்களை தொடர்ந்து கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்கெட், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி பேருந்து நிலையங்கள், சிவன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா ஆகிய 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் மு க ஸ்டாலின் மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்-ஐ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, தயாநிதி மாறன் எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்தது ஏன்?.. உச்சநீதிமன்றம் கேள்வி
    Next Article மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம்.. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…
    Editor TN Talks

    Related Posts

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    February 18, 2026

    அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது!. திருமாவளவன்!.

    டிரம்பின் அழுத்தம்!. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40% குறைந்தது!.

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    February 18, 2026

    அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.

    February 18, 2026

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது!. திருமாவளவன்!.

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.