தேர்தலுக்கு நிர்வாகிகளை தயார்ப்படுத்தும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற ஒன் டூ ஒன் சந்திப்பு கூட்டத்தில் கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கட்சிப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு அதற்கு ஏற்ற அதிகாரம் கட்சியில் நிச்சயம் கிடைக்கும். திமுக அரசின் மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் அதிகம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒற்றுமையுடன் பணியாற்றி 200 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.