இஸ்ரேல் ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இதற்காக புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24×7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உதவி எண்கள் பின்வருமாறு:
தொலைபேசி: 011 24193300 (Land line)
கைப்பேசி எண்: 9289516712 (Mobile Number with Whatsapp)
மின்னஞ்சல் : tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com