பிரமாண்ட ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் கூலி. ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது.
இதன் ஒருபகுதியாக கூலி படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என்று சன் பிக்ர்சஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் சமீபத்திய ஆஸ்தான இசையமைப்பாளரான அனிரத் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். யாரும் எதிர்பாராத வகையில் ஆச்சர்யமூட்டும் வகையில் பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் இந்த பாடலை பாடியுள்ளார்.
முற்போக்கு பாடல்களால் கவனம் ஈர்த்து வரும் அறிவு இப்பாடலை எழுதியுள்ளார். சாண்டி மாஸ்டர் நடன இயக்குநராக இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை ஆடவைத்துள்ளார். ரஜினிக்கு பின்வந்த விஜய் அரசியலில் கால்பதித்து விட்ட நிலையில், ரஜினியின் கூலி படம் அவரது ரசிகர்களை குஷிப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.