Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மத்திய கிழக்கில் பதற்றம்: சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து, 3 விமானங்கள் தரையிறக்கம்!
    தமிழ்நாடு

    மத்திய கிழக்கில் பதற்றம்: சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து, 3 விமானங்கள் தரையிறக்கம்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2025Updated:June 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250624 WA0003
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான்-அமெரிக்கா மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் வான்பரப்பு மூடப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, கத்தார், ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான்பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன. இதன் காரணமாக விமான சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    கத்தார் ஏர்லைன்ஸ் தனது அனைத்து விமான சேவைகளையும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது. இதன் விளைவாக, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 6 புறப்பாடு விமானங்களும், 5 வருகை விமானங்களும் அடங்கும்.

    ரத்து செய்யப்பட்ட விமானங்கள்:

    புறப்பாடு விமானங்கள் (6):

    குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (நேற்று இரவு 11 மணி)

    மஸ்கட் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (நள்ளிரவு 11.45 மணி)

    அபுதாபி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (இன்று அதிகாலை 1 மணி)

    தோகா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (அதிகாலை 3.55 மணி)

    தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் (அதிகாலை 4.20 மணி)

    துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (காலை 6.35 மணி)

    வருகை விமானங்கள் (5):

    தோகாவிலிருந்து சென்னை வரும் கத்தார் ஏர்லைன்ஸ் (இன்று அதிகாலை 2.50 மணி)

    தோகாவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (அதிகாலை 2.50 மணி)

     

    குவைத்தில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (காலை 6.55 மணி)

     

    குவைத்தில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (காலை 10.20 மணி)

     

    அபுதாபியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (காலை 10.25 மணி)

     

    மாற்றுத் தரையிறக்கங்கள் மற்றும் தாமதங்கள்:

    மத்திய கிழக்கு வான்வழி மூடப்பட்டதால், தாய்லாந்தில் இருந்து தோகா சென்று கொண்டிருந்த 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னையில் தரையிறங்கின. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே உள்ளனர். அவர்களுக்கு கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனம் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

     

    இவை தவிர, லண்டன், பஹ்ரைன், துபாய், அபுதாபி, ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

     

    பயணிகளுக்கு அறிவுறுத்தல்:

    சென்னை விமான நிலைய அதிகாரிகள், வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தங்கள் விமானங்களின் புறப்படும் மற்றும் வரும் நேரங்களை அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு தெரிந்து கொண்ட பின்னரே பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மற்றும் தாமதமாகும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    Air Travel Airlines Airport Operations Bahrain Chennai Current Events Flight Cancellations Geopolitics india International Relations Iran Israel Middle East Crisis Qatar Travel Advisory UAE US அமெரிக்கா இந்தியா இஸ்ரேல் ஈரான் ஐக்கிய அரபு அமீரகம் கத்தார் சர்வதேச உறவுகள் சென்னை நடப்பு நிகழ்வுகள் பயண ஆலோசனை பஹ்ரைன் புவிசார் அரசியல் மத்திய கிழக்கு நெருக்கடி விமான நிலைய செயல்பாடுகள் விமான நிறுவனங்கள் விமான ரத்து விமானப் பயணம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்த அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு !
    Next Article தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்: புதிய நிர்வாகிகள் பட்டியல் குறித்து ஆலோசனை
    Editor TN Talks

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.