Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ரயில் பயணம்: வேலூரில் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார்!
    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ரயில் பயணம்: வேலூரில் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2025Updated:June 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250625 WA0000
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சீரடி அதிவேக விரைவு ரயிலில் வேலூர் காட்பாடிக்கு பயணம் மேற்கொண்டார்.

    முதலமைச்சரின் வருகையை ஒட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டிடம் முதல் ரயில் நிலையம் வரை ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தளபதி வாழ்க என கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும், திமுக கொடிகளை அசைத்தும் தொண்டர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

    முதலமைச்சரை வழியனுப்ப அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். மக்களவை உறுப்பினர் ஜெகத் ரட்சகன் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் காட்பாடி வரை ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் புறப்படும் முன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை நோக்கி கை அசைத்தார்.

    நிகழ்ச்சி நிரல்:

    வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    வேலூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, கங்கநல்லூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தையும், கலைஞரின் திருவுருவச் சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.

    அணைக்கட்டிலிருந்து சாலை மார்க்கமாக திருப்பத்தூர் செல்லும் முதலமைச்சர், நாளை (ஜூன் 26) திருப்பத்தூரில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    சென்னை திரும்புதல்:

    கள ஆய்வை முடித்துக்கொண்டு, நாளை மதியம் 12.18 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிய உள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    Anaikattu Chennai Central Chief Minister M.K. Stalin DMK Field Visit Government Multi-Specialty Hospital Inauguration Jolarpettai Kalaignar Arivalayam Katpadi Security Supporters Tirupattur Train Travel Vellore welfare schemes West Coast Express அணைக்கட்டு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கலைஞர் அறிவாலயம் கள ஆய்வு காட்பாடி சென்னை சென்ட்ரல் திமுக திருப்பத்தூர் திறப்பு விழா தொண்டர்கள் நலத்திட்டங்கள் பாதுகாப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் பயணம் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் வேலூர் ஜோலார்பேட்டை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆமிர்கான் – குடியரசுத் தலைவரை சந்தித்த காரணம் என்ன?
    Next Article போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.