மாம்பழ விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக மத்திய அரசிடம் சமபங்கு நஷ்டஈட்டு தொகை கேட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி கூறியுள்ளார்.
டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர் சக்ரபாணி இன்று மத்திய வேளாண்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு..,
தமிழ்நாட்டில் மாம்பழம் உற்பத்தில் கடந்த ஆண்ட விட 3 மடங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது, இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, எனவே விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வீழ்ச்சியை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு பாதி விலையை ஈடுகட்ட வேண்டும் என்று கேட்டுள்ளளோம். மாம்பழ கூழ் மீது 12% ஜி.எஸ்.டி. உள்ளது அதனை 5 சதவிதமாக குறைக்க வலியுறுத்தியுள்ளோம்.
நெல்லுக்கான ஆதார விலையை அதிகரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். குறுவை பருவத்தில் நெல் கொள்முதலை 19 லட்சம் டன்னாக உயர்த்த கோரிக்கை வைத்தோம். பாசிப்பயிறு கொள்முதல் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். கோதுமை 25 ஆயிரம் மெட்ரிக் டனான அதிகரித்து வழங்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு பொது விநியோகத்துறைக்கு வழங்க வேண்டிய 2,670 கோடி ரூபாய் நிலுவை நிதியை வழங்க வேண்டும். அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அமைச்சர்கள் கூர்ந்து கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.