Close Menu
    What's Hot

    நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் மனு தாக்கல்
    தமிழ்நாடு

    போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் மனு தாக்கல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250627 WA0012
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வழக்கின் பின்னணி:

    போதைப்பொருள் சப்ளையர் கெவினிடம் நீண்ட காலமாகப் போதைப்பொருள் வாங்கிப் பயன்படுத்தியதாகவும், தனது நண்பர்களுக்கும் அதைக் கொடுத்துப் பழக்கி வந்ததாகவும் நடிகர் கிருஷ்ணா மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, நேற்று கைது செய்யப்பட்ட கிருஷ்ணாவை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஜாமீன் மனுவில் கிருஷ்ணா முன்வைத்த வாதங்கள்:

    சிறப்பு நீதிமன்றத்தில் கிருஷ்ணா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில், தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், காவல்துறை தன்னைத் தவறாகக் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

    தான் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    வழக்கிற்குத் தொடர்புடைய எந்த போதைப்பொருட்களும் தன்னிடமிருந்து காவல்துறையால் கைப்பற்றப்படவில்லை.

    தான் எந்த போதைப்பொருளும் பயன்படுத்தவில்லை.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் உள்ளிட்ட யாருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.நடிகர் ஸ்ரீகாந்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டுள்ளேன்.

    கெவின் என்பவருக்கும் தனக்கும் அண்மை காலங்களில் எந்த தொடர்பும் இல்லை. கடந்த 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருடன் எந்த நட்பும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னரே அவரின் வாட்ஸ்அப் குழுவில் இருந்து தான் வெளியேறிவிட்டேன். அதன் பிறகு எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. பழைய வாட்ஸ்அப் குழுவை வைத்து தனக்கு எதிராக காவல்துறை இந்த வழக்கை பதிவு செய்திருக்கிறது.

    எனவே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கிருஷ்ணா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    Actor Krishna Bail Chennai Cocaine Court drugs Legal Matter police காவல்துறை கொக்கைன் சட்ட விவகாரம் சென்னை நடிகர் கிருஷ்ணா நீதிமன்றம் போதைப்பொருள் ஜாமீன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆன்லைன் முதலீட்டு மோசடி: மோசடி நபர் கோவையில் கைது
    Next Article எடப்பாடி பழனிசாமியின் சூறாவளி சுற்றுப்பயணம்… வரும் 7-ம் தேதி முதல் தொடக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    தலைவா தரணி ஆள வா! அண்ணாமலைக்கு அழைப்பு – பாஜகவில் பூகம்பம்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026

    நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!

    May 31, 2026

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.