Close Menu
    What's Hot

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»இனி விமானம் வேண்டாம், கப்பல் போதும்…
    இந்தியா

    இனி விமானம் வேண்டாம், கப்பல் போதும்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2025Updated:June 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Singapore shawnanggg S15r4VsQhY unsplash
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 2029-ஆம் ஆண்டிற்குள் 15 லட்சமாக உயர்த்தப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானாந்தா சோனாவால் தெரிவித்துள்ளார்.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை துறைமுகத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானாந்தா சோனாவால் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், இந்தியாவில் முதன்முறையாகவும் உலகளவில் இரண்டாவது முறையாகவும் நடைபெறும் இந்த மாநாடு, கப்பல் பயணிகளின் போக்குவரத்தை மேம்படுத்தவும் சுற்றுலாவின் வளர்ச்சிக்கும் உதவும் என்றார். தற்போது 5 லட்சம் பயணிகள் கப்பல் போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், வரும் 2029-ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டில் மட்டும் 15 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சர்பானந்தா தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் தொடர் முயற்சியின் மூலமாக அனைத்து துறைகளும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கப்பல் போக்குவரத்துத்துறையும் புதிய மைல்கல்லை எட்டிவருவதாக அவர் கூறினார். வெளிநாட்டு பயணிகளுக்கும் தேவையான வகையில் வசதிகளை ஏற்படுத்தித் தரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

    மேலும் கப்பல் கட்டுமானத்தில் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா, விரைவில் முதல் 5 இடங்களுக்குள் வரும் என்றும் ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் கப்பல் போக்குவரத்துத் துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கி, அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் .. நாளை முதல் வேட்புமனு வினியோகம்..
    Next Article அஜித்குமார் உயிரிழந்த விவகாரம்… 6 போலீசாருக்கு 15நாட்கள் சிறை…
    Editor TN Talks

    Related Posts

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    June 21, 2026

    நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!. 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

    June 21, 2026

    ‘பூர்வோதய’ பாதையில் வடகிழக்கின் வளர்ச்சி..!! ஒடிசாவில் பிரதமர் மோடி பெருமிதம்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    30 வயதில் இருந்ததைவிட 50 வயதில் அதிக சுறுசுறுப்பாக இருங்கள்!. சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை!

    2025-ன் சிறந்த தடகள வீரர் நீரஜ் சோப்ரா!. பி.டி.உஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    பிஃபா உலகக் கோப்பை 2026!. ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தி ஜெர்மனி திரில் வெற்றி!

    உலகக் கோப்பை 2026!. நெதர்லாந்தின் ‘கோல் மழை’.. நிலைகுலைந்தது சுவீடன்!

    நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!. 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.