Close Menu
    What's Hot

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்

    “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள்..
    தமிழ்நாடு

    கோவை மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2486643 neetd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன் துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    இந்த நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சித்தாபுதூர் பள்ளியில் நடைபெறும் இதற்கான போக்குவரத்து வசதிகள் உணவு வசதிகள் அனைத்தும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பவன் குமார், தேசிய மருத்துவர்கள் தினமான இன்றே நாம் இந்த இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்பினை துவக்கி உள்ளதாக தெரிவித்தார். மருத்துவ பணி என்பது பாராட்டப்பட வேண்டிய பணி அதனை மாணவர்களாகிய நீங்கள் செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என தெரிவித்தார். இந்த பயிற்சிக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதி உணவு வசதி என அனைத்து தேவைகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

    Be Dedicated Be Humble என்றும் அவர் இந்த வகுப்பில் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் முழு கவனத்துடன் பாடங்களை படிக்க வேண்டும் முதல் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி படிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் நடப்பாண்டில் அரசு பள்ளியில் படித்த உயர் கல்வி சார்ந்தவர்கள் சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அடுத்த முறை இதைவிட அதிகமானவர்கள் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், டாக்டர் என்பது நம்முடைய சமுதாயத்தில் உயர்ந்த படிப்பு கடவுளுக்கு அடுத்து நாம் தேடுவது மருத்துவரை தான் மருத்துவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மரியாதை உள்ளது என தெரிவித்தார். நர்சிங் படிப்பிற்கான இடங்கள் கல்லூரிகளில் கிடைப்பது இல்லை எனவும் கூறினார். ஒரு வருடம் கடினமாக படித்தால் வெற்றி உங்கள் பக்கம் நிற்கும் என கூறிய அவர் செல்போனில் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து நன்றாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கல்விக்கு உதவுவதற்கு எப்பொழுதும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிவகங்கை எஸ்.பி.ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    Next Article கோவையில் மரம் வெட்டி சாய்த்த நபருக்கு : ரூபாய் ஒரு லட்சம் அபராதம்
    Editor TN Talks

    Related Posts

    “இரட்டை வேடம் போடும் விஜய்” – வேல்முருகன் கேள்வி

    December 28, 2025

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்

    “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி

    “இரட்டை வேடம் போடும் விஜய்” – வேல்முருகன் கேள்வி

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    Trending Posts

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    December 28, 2025

    “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்

    December 28, 2025

    “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி

    December 28, 2025

    “இரட்டை வேடம் போடும் விஜய்” – வேல்முருகன் கேள்வி

    December 28, 2025

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.