Close Menu
    What's Hot

    INDW VS SLW| 4 வது டி20!. இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்!

    கோவை பாலத்திற்கு பாரத ரத்னா சுப்பிரமணியம் பெயர்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    பருப்பு மற்றும் அரிசி சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»கோவையில் மரம் வெட்டி சாய்த்த நபருக்கு : ரூபாய் ஒரு லட்சம் அபராதம்
    Uncategorized

    கோவையில் மரம் வெட்டி சாய்த்த நபருக்கு : ரூபாய் ஒரு லட்சம் அபராதம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 07 01 130259
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை அரச மரத்தின் கிளையை வெட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, மரத்தை முழுமையாக வெட்டி சாய்க்கப்பட்டது. அதனால் மரம் வெட்டியவருக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    கோவை, தெற்கு வட்டம், சபரிபாளையம் கிராமம் சண்முகா வீதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் தனியார் மருத்துவமனைக்கு முன்பு சாலை ஓரத்தில் இரண்டு அடி சுற்றளவு 10 அடி உயரத்தில் 12 வயதுடைய அரச மரம் இருப்பதாகவும், அதன் கிளை காய்ந்து மருத்துவமனை மீது சாய்ந்துவிடும் அபாயம் உள்ளதால் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து உள்ளது. மரக் கிளையை வெட்டுவதற்கு அனுமதி கோரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    சபரிபாளையம் வி.ஏ.ஓ மற்றும் ஆர்.ஐ ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ஆபத்தாக உள்ள கிளையை மட்டும் வெட்டி அகற்ற அனுமதி வழங்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தனர்.

    உரிய வழிமுறையை பின்பற்றி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட ஆர்.ஐ மற்றும் வி.ஏ.ஓ முன்னிலையில் வெட்டி அகற்ற அனுமதி அளித்து மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையருக்கு தெற்கு தாசில்தார் முகமது சைபு உத்தரவிட்டார்.

    மறக் கிளையை வெட்டும் முன்பும், வெற்றிய பின்பும் புகைப்படங்களை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், கோவை டவுன் நில வருவாய் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது.

    ஆனால் இரவு நேரத்தில் அரசு அதிகாரிகள் இல்லாமல், மரம் வெட்டப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வி.ஏ.ஓ மற்றும் ஆர்.ஐ ஆகியோர் ஆய்வு செய்து தாசில்தாருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அரசின் உத்தரவை மீறி அனுமதிக்கு மாறாக மரத்தை வெட்டி சாய்த்த குற்றத்திற்காக கனகராஜ் என்பவருக்கு விதிமுறைப்படி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தாசில்தார் முகமது சைபு உத்தரவிட்டார்.

    கனகராஜ் அத்தகையை செலுத்தினார். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள்..
    Next Article அத்திக்கடவு வனப்பகுதியில் பழங்குடியின இளைஞர் சுட்டுக்கொலை.
    Editor TN Talks

    Related Posts

    ராணுவ வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. இந்திய ராணுவம் அதிரடி!.

    December 26, 2025

    சின்ன கால்குலேஷன் மிஸ்டேக்கால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது!. நயினார் நாகேந்திரன் தாக்கு!.

    December 20, 2025

    கேரள உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற காங். கூட்டணி: ஆளும் கட்சிக்கு பின்னடைவு!

    December 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    INDW VS SLW| 4 வது டி20!. இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்!

    கோவை பாலத்திற்கு பாரத ரத்னா சுப்பிரமணியம் பெயர்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    பருப்பு மற்றும் அரிசி சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?.

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    INDW VS SLW| 4 வது டி20!. இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்!

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.