Close Menu
    What's Hot

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    ரூ.13 லட்சம் கோடி கடன்.. பொருளாதார சவாலின் மத்தியில் முதல் பட்ஜெட்.. மரிய வில்சனின் பின்னணி என்ன?

    இந்தியாவின் முதல் AI City.. அறிவகத்தில் உருவாகும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»நாளை நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம்… கடைகள் திறக்குமா? பேருந்துகள் ஓடுமா?
    இந்தியா

    நாளை நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம்… கடைகள் திறக்குமா? பேருந்துகள் ஓடுமா?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2025Updated:July 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதற்காக தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜூலை 9ம் தேதி) நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டில் இருந்து திமுகவின், தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இதுதொடர்பாக தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டதன் காரணமாக பொது போக்குவரத்து என்கிற அமைப்பு பாதுகாப்பற்றதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உள்ளிட்ட17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்துகொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். எனவே குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படலாம் என்று தெரிகிறது.

    சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு இதுவரையில் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். அரசு ஊழியர் சங்கங்களின் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கு அதிகமானோர் பங்கேற்பார்கள் என அனைத்து இந்திய வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி அமர்ஜீத் கவுர் தெரிவித்தார்.மேலும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையே இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக வங்கித்துறை அறிவித்து உள்ளது. இதைப்போல காப்பீடு துறையும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்து உள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாழ்க்கையை உணர விரும்புகிறீர்களா? இந்தப் படத்தை பாருங்கள்… நயன்தாரா அட்வைஸ்…
    Next Article இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி… ஆர்ச்சர் விளையாடுவாரா? பென் ஸ்டோக்ஸ் சொல்வது என்ன?
    Editor TN Talks

    Related Posts

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    August 5, 2026

    ரூ.13 லட்சம் கோடி கடன்.. பொருளாதார சவாலின் மத்தியில் முதல் பட்ஜெட்.. மரிய வில்சனின் பின்னணி என்ன?

    August 5, 2026

    இந்தியாவின் முதல் AI City.. அறிவகத்தில் உருவாகும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    ரூ.13 லட்சம் கோடி கடன்.. பொருளாதார சவாலின் மத்தியில் முதல் பட்ஜெட்.. மரிய வில்சனின் பின்னணி என்ன?

    இந்தியாவின் முதல் AI City.. அறிவகத்தில் உருவாகும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    மக்களை கவர்ந்த பட்ஜெட் அறிவிப்புகள்… 8 கிராம் தங்கம் முதல் வெற்றி மடிக்கணினி வரை!

    மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய சைக்கிள் திட்டம்.. அமைச்சர் மாஸ் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.