Close Menu
    What's Hot

    திரிஷா பெயரை மீண்டும் முன்வைத்த ஆர்.பி உதயகுமார்.. காவிரி விவகாரத்தின் பின்னணி என்ன?

    ஸ்டிக்கர் பட்ஜெட் தான் இது… புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை..!! எடப்பாடி பழனிசாமி சாடல்!!

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!
    Featured

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    editor5By editor5August 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 17 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரமான திருப்பூரின் ஜவுளித்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் மரிய வில்சன், திருப்பூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்’ அமைக்கப்படும் என்றும், இதற்கு முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

    இதனுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்தித் திட்டமும் ஊக்குவிக்கப்படும். திருப்பூர் ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்து, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. ஏற்றுமதி மூலம் மட்டும் சுமார் 40 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி ஈட்டப்படுகிறது. சமீபத்திய ஆண்டில் பின்னலாடை ஏற்றுமதி ரூ.46 ஆயிரம் கோடியைத் தாண்டியதாகத் தொழில் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

    ஆனால் பருத்தி விலை உயர்வு, செயற்கை இழைகளுக்கான சார்பு ஆகியவை உற்பத்திச் செலவை அதிகரித்து, உள்நாட்டு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக சர்வதேச ஆர்டர்கள் திருப்பூரை நோக்கி திரும்பியதால், தொழில்துறை மீண்டு வரத் தொடங்கியது. இந்தச் சூழலில் வெளியான அரசின் அறிவிப்பு தொழிலதிபர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதிய தொழில்நுட்ப மையம், ஆராய்ச்சி, பயிற்சி, நவீன இயந்திரங்கள் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும். பசுமை ஆடை உற்பத்தியில் கழிவுநீர் மறுசுழற்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத முறைகள் ஆகியவற்றிற்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

    உலகச் சந்தையில் சுற்றுச்சூழல் நட்பு ஆடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில், இந்தத் திட்டம் திருப்பூரின் போட்டித்தன்மையை உயர்த்தி, லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் திருப்பூர், இந்த முயற்சிகள் மூலம் மேலும் வலுப்பெறும் என்பது தொழில்துறையினரின் நம்பிக்கை.

    tn assembly tn budget TN Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.13 லட்சம் கோடி கடன்.. பொருளாதார சவாலின் மத்தியில் முதல் பட்ஜெட்.. மரிய வில்சனின் பின்னணி என்ன?
    Next Article ஸ்டிக்கர் பட்ஜெட் தான் இது… புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை..!! எடப்பாடி பழனிசாமி சாடல்!!
    editor5

    Related Posts

    திரிஷா பெயரை மீண்டும் முன்வைத்த ஆர்.பி உதயகுமார்.. காவிரி விவகாரத்தின் பின்னணி என்ன?

    August 5, 2026

    ஸ்டிக்கர் பட்ஜெட் தான் இது… புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை..!! எடப்பாடி பழனிசாமி சாடல்!!

    August 5, 2026

    ரூ.13 லட்சம் கோடி கடன்.. பொருளாதார சவாலின் மத்தியில் முதல் பட்ஜெட்.. மரிய வில்சனின் பின்னணி என்ன?

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரிஷா பெயரை மீண்டும் முன்வைத்த ஆர்.பி உதயகுமார்.. காவிரி விவகாரத்தின் பின்னணி என்ன?

    ஸ்டிக்கர் பட்ஜெட் தான் இது… புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை..!! எடப்பாடி பழனிசாமி சாடல்!!

    திருப்பூர் ஜவுளித் தொழிலுக்கு மெகா பூஸ்ட்… ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அறிவிப்பு!

    ரூ.13 லட்சம் கோடி கடன்.. பொருளாதார சவாலின் மத்தியில் முதல் பட்ஜெட்.. மரிய வில்சனின் பின்னணி என்ன?

    இந்தியாவின் முதல் AI City.. அறிவகத்தில் உருவாகும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.