Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ராசிபலன்»கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு..
    ராசிபலன்

    கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் புகழ்பெற்ற தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக குடமுழக்கு நடைபெற்றது.

    கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, நினைவுத் திருமஞ்சனம், எண் வகை மருந்து சாற்றுதல், இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருமுறை, நாட்டிய விண்ணப்பம் உள்ளிட்டவை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இன்று காலை திருப்பள்ளி எழுச்சி, மூல மூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றதை தொடர்ந்து ராஜகோபுரம், விமானங்கள், பரிவாரங்கள், மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமன்னிப்புக்கோரிய சென்னை மாநகராட்சி ஆணையர்..
    Next Article அண்ணாமலை பல்கலை. தற்காலிக பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படுவது எப்போது?
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.