Close Menu
    What's Hot

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தவெக பெயர் பொறித்த படகுகளுக்கு மானியம் கிடையாதா?…
    தமிழ்நாடு

    தவெக பெயர் பொறித்த படகுகளுக்கு மானியம் கிடையாதா?…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    large tvk symbol boat 210224
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதாக தவெக தலைமை கூறியுள்ளது.

    இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது…

    திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர்.

    தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று, அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது போன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

    ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அப்படிச் செல்கையில் அவர்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கைது மற்றும் படகுகள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகிறது. மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு முழு அளவில் பக்க பலமாக இருக்க வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமை. ஆனால் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய, கச்சத்தீவை மீட்பது அல்லது அதைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் உள்பட, பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநில அரசானது அவர்களை ஏதோ அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல எதேச்சதிகார அரச பயங்கரவாதத்தோடு நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதியிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்?

    படகுகளில் எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறுமா?

    மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல, பொதுமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதைத் திமுக தனது சொந்தப் பணத்தை எடுத்து மீனவர்களுக்கு வழங்குவது போல நினைத்துக்கொள்ளக் கூடாது.

    தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேதாரண்யத்தில் ஊராட்சி செயலாளர் தூக்கிட்டுத் தற்கொலை
    Next Article பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ்-ஆக மாறிவிட்டார் இபிஎஸ் – முதலமைச்சர் விமர்சனம்
    Editor TN Talks

    Related Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.