Close Menu
    What's Hot

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    திமுக 176 இடங்களில் போட்டியா? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

    வெடிக்கும் போர்!. ஈரானுக்கு தேதி குறித்த டிரம்ப்!. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அவசர நிலை குறித்து காங். எம்.பி., சசி தரூர் சர்ச்சை கருத்து… எங்களுக்கு சம்பந்தம் இல்லை என காங். தலைமை கொந்தளிப்பு…
    இந்தியா

    அவசர நிலை குறித்து காங். எம்.பி., சசி தரூர் சர்ச்சை கருத்து… எங்களுக்கு சம்பந்தம் இல்லை என காங். தலைமை கொந்தளிப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”அவசரநிலை ஒரு தற்காலிக ஒழுங்கை கொண்டு வந்தது என்றும், ஜனநாயக அரசியலின் சீர்குலைவிலிருந்து நிவாரணத்தை வழங்கியது என்றும் சிலர் வாதிடலாம். ஆனால், இந்த விதிமீறல்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் சர்வாதிகாரமாக மாறியதன் விளைவாகும். அவசரநிலையின் போது எந்த ஒழுங்கு தோன்றியிருந்தாலும், அது நமது குடியரசின் ஆன்மாவின் விலையில் வந்தது ஆகும்’ என குறிப்பிட்டு உள்ளார்.

    இந்தியாவில் அவசர நிலை கொண்டு வந்த இந்திரா காந்தியை 1977-ல் மக்கள் நிராகரித்து பதிலடி கொடுத்தனர் என்றும் தெரிவித்து இருக்கிறார். இன்றைய இந்தியா 1975-ம் ஆண்டு இந்தியா போல இல்லை என கூறியுள்ள சசிதரூர், நாம் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், அதிக வளர்ச்சியடைந்தவர்களாகவும், பல வழிகளில் வலுவான ஜனநாயகமாகவும் இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.

    சசிதரூரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ள கருத்தில், ‘சக தலைவர் ஒருவர் பா.ஜனதா குரலில் வார்த்தைக்கு வார்த்தை பேசத்தொடங்கும்போது, ‘பறவை கிளியாக மாறுகிறதா’ என்றுதான் யோசிக்க தோன்றுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே சசிதரூர் ’ஆபரேஷன் சிந்தூர்’ விவகாரத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருந்தார். இதனால் அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. சசி தரூரின் கருத்துகள் அவருடைய தனிப்பட்ட கருத்துகள் என்றும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇங்.-இந்தியா இடையே 3வது டெஸ்ட்… பாதியில் வெளியேறிய பண்ட்… நடந்தது என்ன?
    Next Article ஹரியானா : டென்னிஸ் வீராங்கனை சுட்டுக் கொலை… வீராங்கனையின் தந்தை கைது…
    Editor TN Talks

    Related Posts

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    February 20, 2026

    14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

    February 20, 2026

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    திமுக 176 இடங்களில் போட்டியா? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

    வெடிக்கும் போர்!. ஈரானுக்கு தேதி குறித்த டிரம்ப்!. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

    திமுகவுக்கு ஆதரவு கொடுத்த ஓபிஎஸ்!. ஸ்டாலினை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி!

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    Trending Posts

    வெடிக்கும் போர்!. ஈரானுக்கு தேதி குறித்த டிரம்ப்!. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

    February 20, 2026

    அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு!. அரசியல் தலைவர்கள் வரவேற்பு!

    February 20, 2026

    14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

    February 20, 2026

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    February 20, 2026

    திமுக 176 இடங்களில் போட்டியா? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

    February 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.