Close Menu
    What's Hot

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்… வார்டுகளை  மறுவரையறை செய்ய முடிவு!

    உச்சநீதிமன்ற வரலாற்றில் பொன் நாள்..!! 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதுரை ஆதீனம் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு..
    தமிழ்நாடு

    மதுரை ஆதீனம் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1360556
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பினை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

    கடந்த மே 2ம் தேதி சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும் இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தனர், தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்நிலையில் இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உள் நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டது.

    காவல்துறை தரப்பில், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதால் மதுரை ஆதினத்திற்கு முன் ஜாமீன் வழங்க கூடாது, அவரின் முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டது. இதையடுத்து நீதிபதி, முன் ஜாமீன் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் ஜூலை 30ஆம் தேதி முதல் மருத்துவக் கலந்தாய்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்.
    Next Article காமராஜர் குறித்து திமுக அவதூறு விமர்சனம்.. காங்கிரசுக்கு ரோஷமில்லையா என இன்பதுரை கேள்வி..
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    June 2, 2026

    உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்… வார்டுகளை  மறுவரையறை செய்ய முடிவு!

    June 2, 2026

    ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,? முதல்வர் விஜய்யை சந்தித்தார் ப.சிதம்பரம்..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்… வார்டுகளை  மறுவரையறை செய்ய முடிவு!

    உச்சநீதிமன்ற வரலாற்றில் பொன் நாள்..!! 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு..!!

    ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,? முதல்வர் விஜய்யை சந்தித்தார் ப.சிதம்பரம்..!!

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.