Close Menu
    What's Hot

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»தனியார் வசம் செல்லும் ரயில்வே பாதுகாப்பு?… ரயில்வே அமைச்சகம் கூறுவது என்ன?…
    இந்தியா

    தனியார் வசம் செல்லும் ரயில்வே பாதுகாப்பு?… ரயில்வே அமைச்சகம் கூறுவது என்ன?…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரயில்வே பாதுகாப்பு பணியை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    இது குறித்து ரயில்வே அமைச்சகம் கூறுகையில், ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்த இந்திய ரயில்வே ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்க உள்ளது. ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பை தனியார் கைகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரயில்களில் சட்ட விரோத பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு விரும்புகிறது.

    விமான நிலையங்களில் உள்ளதை போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில் நிலையங்களிலும் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதிகரிக்கும் கடத்தலை தடுக்க., ரயில்கள் வழியாக கடத்தலைத் தடுக்கவும், பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தவும் இந்திய ரயில்வே, சோதனை அடிப்படையில் இரண்டு நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பஞ்சாப் மாநிலம் சண்டிகர், லக்னோ கோமதி நகர் ரயில் நிலையங்கள் உட்பட இரண்டு நிலையங்களில் தனியார் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் வெளியான பிறகு, மற்ற நிலையங்கள் பரிசீலிக்கப்படும். இது வெற்றியடைந்தால், நாட்டின் பிற முக்கிய நிலையங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும். ஏற்கனவே பல வசதிகளை மத்திய அரசு அவுட்சோர்ஸ் செய்துள்ளது. இதில் ஹவுஸ்கீப்பிங், கேட்டரிங் போன்றவை அடங்கும், இதனால் பயணிகள் சிறந்த சேவைகளைப் பெற முடியும் என அரசு நம்புகிறது. உதாரணம் ரயில் நிலையங்கள் முன்பை விட தற்போது சுத்தமாக மாறி வருவதை காண முடிகிறது.

    தனியார் வசம் ஒப்படைக்கும் போது, பாதுகாப்பு பணியாளர்கள் ஸ்கேனிங் மற்றும் பயணியர்கள் மீதான கவனிப்பு மற்றும் நெரிசலை ஒழுங்குப்படுத்துதல் பணியில் ஈடுபடுவர். நடைமுறைக்கு வரும் போது ரயில்வே பாதுகாப்பு படை (RPF) வீரர்கள் தங்கள் கடமைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.7கோடி முதலீடு… ரூ.90கோடி லாபம்… சாதனை படைத்த ”டூரிஸ்ட் ஃபேமிலி”…
    Next Article இரண்டு மடங்கு அதிகரித்த தக்காளி விலை.. ரூ.50-க்கு விற்பனை!
    Editor TN Talks

    Related Posts

    FIRST NIGHT ரூமாக மாறிய AC கோச்..!! சிக்கிய டிக்கெட் செக்கர்.. அதிரடி சஸ்பெண்ட்..!!

    July 9, 2026

    பிரதமர்கள் மோடி – அல்பனீஸ் வரலாற்றுச் செல்ஃபி – இந்தியா-ஆஸ்திரேலியா உறவின் புதிய அத்தியாயம்  

    July 9, 2026

    அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரம்: காங்கிரஸை வசைபாடிய கங்கனா ரணாவத்..!!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!

    10-ம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர்..! பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்..! 

    பனகல் அரசரின் சாதனைகளே திராவிட மாடலின் அடித்தளம்.. மு.க. ஸ்டாலின் பெருமிதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.