Close Menu
    What's Hot

    பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!
    Featured

    சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 mariya wilson
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சொத்து பிரச்சினையில் சகோதரரை தாக்கிய வழக்கில், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன்,  கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்‌.

    புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை நகலைப் பெற நேரில் ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய வில்சன் தொடர்ந்து  ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் ஜூலை 10 ஆம் தேதி கட்டாயமாக  ஆஜராக வேண்டும் என மரிய வில்சனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும் மரியவில்சன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, குடும்ப பிரச்னை தொடர்பாக சமரசம் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை ஏற்று, உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்துக்கு வழக்கை அனுப்பி வைத்த நீதிபதி, ஜூலை 13 ஆம் தேதி அமைச்சர் மரியவில்சன், அவரது தந்தை மற்றும் சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோரை சமரச தீர்வு மையத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

    அதேசமயம், புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை (ஜூலை 10 ஆம் தேதி ) நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்களித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    Family Property Case maria wilson Minister Maria Wilson Property Dispute
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article10-ம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர்..! பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்..! 
    Next Article வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்

    July 9, 2026

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    July 9, 2026

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்

    கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – பாஜக வரவேற்பு

    வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அநீதி; காங்கிரஸ் கண்டனம்

    சகோதரருடன் சமரசத்துக்கு தயார்; சொத்து பிரச்சனை வழக்கில் இறங்கி வந்த அமைச்சர் மரிய வில்சன்!

    10-ம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர்..! பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.