Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இரண்டு மடங்கு அதிகரித்த தக்காளி விலை.. ரூ.50-க்கு விற்பனை!
    தமிழ்நாடு

    இரண்டு மடங்கு அதிகரித்த தக்காளி விலை.. ரூ.50-க்கு விற்பனை!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250722 WA0006
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தக்காளி விளைச்சல் குறைவு மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் தக்காளியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ₹40 முதல் ₹50 வரை விற்பனையாகிறது.

     

    வழக்கமாக திண்டுக்கல் சந்தைக்கு ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், தேனி, பழனி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால், தற்போது போதிய மழையின்மை காரணமாக இந்தப் பகுதிகளில் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. தினசரி 40 டன் தக்காளி வர வேண்டிய நிலையில், தற்போது வெறும் 10 டன் மட்டுமே சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது.

     

    அதேபோல், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் பெய்து வரும் மழையால் அங்கிருந்து வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. வடமாநிலங்களில் தக்காளியின் தேவை அதிகரித்துள்ளதால், தமிழகத்திலிருந்து தக்காளி ஏற்றுமதியாவது திண்டுக்கல்லில் விலையேற்றத்திற்கு மேலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

     

    கடந்த வாரம் திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ₹20 முதல் ₹30 வரை விற்பனையானது. ஆனால், இன்று அதன் விலை ₹50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ₹250க்கு விற்பனையான 15 கிலோ தக்காளி பெட்டி, தற்போது ₹500க்கு விற்பனையாகிறது. முதல் தர தக்காளி பெட்டியின் விலை ₹900 வரை எட்டியுள்ளது.தக்காளியின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றும், இல்லையெனில் விலை மேலும் கடுமையாக உயரக்கூடும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குப் பிறகு தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    tomato tomato sale ஏற்றுமதி காய்கறி மார்க்கெட் தக்காளி திண்டுக்கல் மழை வரத்துக் குறைவு வியாபாரிகள் விலை உயர்வு விவசாயிகள் விளைச்சல் குறைவு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனியார் வசம் செல்லும் ரயில்வே பாதுகாப்பு?… ரயில்வே அமைச்சகம் கூறுவது என்ன?…
    Next Article காவலர் அஜித் குமார் கொலை வழக்கு.. ₹ரூ. 25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
    Editor TN Talks

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.