Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கட்சிக்கொடி விவகாரம் – தவெக புதிய மனு
    அரசியல்

    கட்சிக்கொடி விவகாரம் – தவெக புதிய மனு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dinamani2024 10 260wpjnbmdvijai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தடை கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தாக்கல் செய்த வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, த.வெ.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் பதிவுத்துறையில், தங்கள் அமைப்பின் வணிக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆனந்த் பதில்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கொள்கை அடையாளமாகவே அரசியல் கட்சி கொடியை பயன்படுத்துகிறது. இதில் வர்த்தக நடவடிக்கையோ, பொருளாதார பரிவர்த்தனையோ ஏதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    மேலும், த.வெ.க. எந்த வர்த்தகத்திலும், வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. நடிகர் விஜய், அரசியலில் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்ற அற்ப காரணத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

    கட்சியினருடன் விரிவான விவாதங்கள் நடத்தி வடிவமைக்கப்பட்டுள்ள த.வெ.க. கட்சிக் கொடி என்பது வெறும் அடையாளம் அல்ல; தமிழ் வரலாறு, கலாச்சாரம், அரசியலை உள்ளடக்கிய கொள்கை வடிவமைப்பு. புரட்சியை குறிக்க சிவப்பும், நம்பிக்கையை குறிக்க மஞ்சளும் பயன்படுத்தப்பட்டுள்ளது என பதில்மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    நிறங்களை பயன்படுத்துவதற்கு இதுபோன்ற விளக்கங்களை மனுதாரர், வணிக முத்திரை பதிவின் போது அளித்துள்ளாரா என, த.வெ.க. தனது பதில்மனுவில் கேள்வி எழுப்பியுள்ளது.

    த.வெ.க. கொடியில் சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறங்களை பயன்படுத்த தடை விதித்தால், அது கட்சியின் அரசியல் இருப்பையே பாதிக்கச் செய்யும். வணிகச் முத்திரை என்பது, சங்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அதிக அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, த.வெ.க. பதில்மனுவுக்கு விளக்கம் அளிக்க தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
    Next Article 10 நாட்கள் கழித்து தலைமை செயலகம் வரும் முதலமைச்சர்… புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.