Close Menu
    What's Hot

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக பறிக்கப் போகிறது… அன்புமணி ராமதாஸ் கண்டனம்…
    தமிழ்நாடு

    இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக பறிக்கப் போகிறது… அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக பறிக்கப் போகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருவள்ளூர் மாவட்டம் செங்காத்தகுளம் பகுதியில் முப்போகம் விளையும் விவசாய நிலங்களை அறிவுசார் நகரம் அமைப்பதற்காக கையகப்படுத்தும் திமுக அரசைக் கண்டித்து பா.ம.க. சார்பில் நேற்று முன்நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொண்ட மேல்மாளிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தனபாக்கியம் என்ற பெண்மணி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அறிவுசார் நகரம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களைப் பார்ப்பதற்காக நான் சென்றிருந்த போது, தனபாக்கியம் என்னை சந்தித்து முறையிட்டார். அப்போதே அவர் கலங்கிய மன நிலையில் தான் இருந்தார். அவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகவும், அதையும் அடி மாட்டு விலைக்கு அரசு பறித்துக் கொண்டால் தமக்கு வாழ்வாதாரமே இருக்காது என்று கலங்கினார். அவருக்கு ஆறுதல் கூறிய நான், உங்களின் நிலம் கையகப்படுத்தப்படாமல் பாதுகாப்பேன் என்று உறுதியளித்தேன்.

    அதைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். அதன் பின் வீட்டில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை நம்ப முடியவில்லை. நிலம் பறிபோய்விடும் என்ற அழுத்தமும், மன உளைச்சலும் தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் ஆகும். அப்பாவி மக்களின் நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

    விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் நிலங்களை பறிக்கும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். விளைநிலங்கள் எதற்காகவும் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். உயிரிழந்த தனபாக்கியம் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக எம்.பி.,யும், எம்.எல்.ஏ.,வும் பொது மேடையில் குழாயடி சண்டை… அதுவும் ஆட்சியர் முன்னிலையில்… என்ன நடந்தது?
    Next Article இன்ஸ்டாவில் தொடங்கிய காதல்… 25சவரன் நகை பணம் சுருட்டல்… காதலன் கைது…
    Editor TN Talks

    Related Posts

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    June 21, 2026

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம்: தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 2  பேர் பலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.