Close Menu
    What's Hot

    பரபரப்பின் உச்சத்தில் சென்ற ஆட்டம்..!! 1-0 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்திய ஐவரி கோஸ்ட்..!!

    மகாராஷ்டிரா: கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்த வாகனம்..!! ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம்..!!

    உயருகிறதா பழனி பஞ்சாமிர்தம், தங்கரத புறப்பாடு கட்டணம்..?? பக்தர்களிடமே முடிவை கொடுத்த நிர்வாகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீது பதில் தருக
    தமிழ்நாடு

    ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீது பதில் தருக

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4104730 armstrong
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும், வழக்கை சிபிஐ- க்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
    அந்த மனுவில், வழக்கில் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் உள்ள அரசியல் தொடர்பு குறித்து விசாரிக்கப்படவில்லை எனவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுடன் நெருக்கமான செல்வப்பெருந்தகையிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்படவில்லை எனவும், உண்மையை வெளிக்கொண்டு வராமல் அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், விசாரணையில் தலையிட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ரவுடிகள் என்பதால் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணை வந்தபோது, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த மனுவை ஏற்க கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் காவல் துறை உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி
    Next Article எவரெஸ்ட் ஏறிய மாணவரை கவுரவித்த வேலம்மாள் பள்ளி
    Editor TN Talks

    Related Posts

    உயருகிறதா பழனி பஞ்சாமிர்தம், தங்கரத புறப்பாடு கட்டணம்..?? பக்தர்களிடமே முடிவை கொடுத்த நிர்வாகம்..!!

    June 15, 2026

    மக்களை தெரு நாய்களோடு ஒப்பிட்டேனா..?? சர்ச்சைக்கு டாட் வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    June 15, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பரபரப்பின் உச்சத்தில் சென்ற ஆட்டம்..!! 1-0 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்திய ஐவரி கோஸ்ட்..!!

    மகாராஷ்டிரா: கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்த வாகனம்..!! ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம்..!!

    உயருகிறதா பழனி பஞ்சாமிர்தம், தங்கரத புறப்பாடு கட்டணம்..?? பக்தர்களிடமே முடிவை கொடுத்த நிர்வாகம்..!!

    மக்களை தெரு நாய்களோடு ஒப்பிட்டேனா..?? சர்ச்சைக்கு டாட் வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    நடுவானில் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்கள்..!! பரிதாபமாக பறிபோன 6 உயிர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.