Close Menu
    What's Hot

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாமக்கல் : அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்… வரி விதிப்பு அதிகரிப்பால் பண்ணையாளர்கள் கவலை…
    தமிழ்நாடு

    நாமக்கல் : அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்… வரி விதிப்பு அதிகரிப்பால் பண்ணையாளர்கள் கவலை…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 5, 2025Updated:August 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் சுமார் 7 கோடி முட்டையின் கோழிகள் மூலம் தினசரி 5.50கோடி முட்டைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து ஏற்கனவே துபாய், பக்ரைன், கத்தார், ஓமன், ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு இடங்களுக்கு மாதந்தோறும் சுமார் 15 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா அரசு, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தது. முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி கொண்ட 21 கன்டெய்னர்களில் தலா 4¾ லட்சம் முட்டைகள் என சுமார் ஒரு கோடி முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கன்டெய்னர் 30 நாட்களில் அமெரிக்கா சென்றடைந்தது. தொடர்ந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் என பண்ணையாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

    இந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்க அரசு 25 சதவீதம் வரி விதித்து உள்ளது. இது நாமக்கல் பகுதியை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்களுக்கு பேரிடியாக அமைந்து உள்ளது. 25 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பால் நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.

    வரி விதிப்பு காரணமாக இந்திய முட்டைகளை வாங்க அங்குள்ள வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் முட்டை ஏற்றுமதி தடைபட்டு உள்ளதாக நாமக்கல் பகுதியை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரையில் 21-ம் தேதி தவெக மாநாடு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
    Next Article ’கூலி’ படத்தில் நான் தான் ஹீரோ… நாகர்ஜூனா சுவாரஸ்ய தகவல்…
    Editor TN Talks

    Related Posts

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    June 14, 2026

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    June 14, 2026

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    தூத்துக்குடி மீனவர்கள் உற்சாகம்..!! 61 நாள் தடைக்காலத்துக்குப் பின் நாளை அதிகாலை மீன்பிடி தொடக்கம்..!!

    தவெகவினர் தற்குறி அல்ல, அவர்கள் குறிவைத்து தாக்கும் அம்புக்குறி..!! ராகவா லாரன்ஸ் அதிரடி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.