Close Menu
    What's Hot

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»ஆணவ கொலைக்கு விஜய் குரல் கொடுக்கவில்லையே ஏன்?… திருமா கேள்வி…
    அரசியல்

    ஆணவ கொலைக்கு விஜய் குரல் கொடுக்கவில்லையே ஏன்?… திருமா கேள்வி…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 12, 2025Updated:August 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆணவக் கொலைக்கு எதிராக விஜய் குரல் கொடுக்காதது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளர்.

    தொடர் ஆணவ படுகொலைகளை கண்டித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையேற்று நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,

    ”ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்றிட வேண்டும். மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவ கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதோடு, அவரது தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை தேசிய அளவில் மத்திய அரசு இயற்றிட வேண்டும். இந்த ஆணவ படுகொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, இந்த படுகொலைகளை செய்யக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 40 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த ஆணவ படுகொலைகள் நடக்கிறபோது பெரிய கட்சிகளும், புதிய கட்சிகளும் வாய் திறப்பதில்லை.

    நடிகர் விஜய்யால் இந்த ஆணவ படுகொலையை கண்டிக்கக்கூட முடியவில்லை. தி.மு.க. அரசை கடுமையாக விமர்சிக்கிற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் இந்த ஆணவ படுகொலையை கண்டிக்க முடியவில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குகள் மட்டும் அ.தி.மு.க.விற்கு வேண்டும். ஆனால் அவர்களுக்காக அ.தி.மு.க. பேசுவதில்லை. இன்றைக்கு இந்த ஆணவ படுகொலையை விவாதிக்ககூடிய அளவுக்கு சூழ்நிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் உருவாக்கி உள்ளது. ஆணவ கொலைகள் காலம் காலமாக இருக்கிறது.

    கவினை ஆணவ படுகொலை செய்ததை சிலர் நியாயப்படுத்தி பேசுகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது அபாண்டமான பலியை சுமத்துகிறார்கள். அவதூறு பரப்புகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தபோது பா.ஜனதா போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. அண்ணா, கருணாநிதி ஆகியோரின் துணிச்சல் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த சட்டத்தை முதல்-அமைச்சர் கொண்டு வந்தால் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக பரிணாமம் பெற முடியும். பல மாநிலங்களுக்கு வழிகாட்டக்கூடிய முன்மாதிரி அரசை நீங்கள் நடத்துகிறீர்கள் என்று வரலாற்றில் பதிவாகும்” எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை என்ன? அன்புமணி கேள்வி…
    Next Article விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்… அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பு…
    Editor TN Talks

    Related Posts

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    June 20, 2026

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    June 20, 2026

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    ஈரான்: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை..!! வலுக்கும் எதிர்ப்பு..!!

    ஒரே பவுலர்… ஒரே ஃபீல்டர்… ஹாட்ரிக் கேட்ச்!. ரோகித் – பிரசித் கிருஷ்ணா அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.