Close Menu
    What's Hot

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பதவி நீக்க மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது… காங். தலைவர் செல்வபெருந்தகை கடும் தாக்கு…
    அரசியல்

    பதவி நீக்க மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது… காங். தலைவர் செல்வபெருந்தகை கடும் தாக்கு…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 21, 2025Updated:August 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பதவி நீக்க மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாளையுடன் முடிவடைகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் முக்கியமான மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, அரசியலமைப்பு மசோதா, யூனியன் பிரதேசங்களின் அரசு திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    அவற்றில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019-ஆனது அதன் 54வது பிரிவில் திருத்தம் கோருகிறது. அதன்படி பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் போன்ற ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக 30 நாட்கள் சிறை வைக்கப்பட்டால், 31-வது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவி நீக்கம் செய்யப்படுவர் என்ற சட்ட வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவியிலிருந்து அகற்றுவது என 130வது அரசியமைப்பு சட்டத்திருத்தம் ஒன்றிய அரசு கொண்டு வருவது அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானது.

    இதுவரை பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசமைப்பு சட்டத்திருத்தங்கள் அனைத்தும் அவர்களுக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் ஒன்றிய பாஜக அரசு, இதை பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, அவசரகதியில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத்திருத்தத்தை உடனடியாக கைவிடவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி…
    Next Article தவெக-வின் சுவாரஸ்ய வேட்பாளர் பட்டியல்… மதுரை முழுக்க விஜய் மட்டும் தானா?
    Editor TN Talks

    Related Posts

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    April 11, 2026

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 11, 2026

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.