Close Menu
    What's Hot

    ஆழ்கடலில் நிலையான மீன்பிடிப்புக்கான தேசிய திட்டம் ; துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

    வாட்ஸ்அப் ‘Username’ விவகாரம்!. பதிலளிக்காத மெட்டா நிறுவனம்!.

    சீனாவையே சார்ந்திருக்கும் இந்தியா –  எங்கே போனது மோடியின் தன்னிறைவு இந்தியா?  – காங்கிரஸ் கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மோடி ஆட்சியில் கைரேகை திருட்டு –  காங்கிரஸ் கடும் விமர்சனம்
    Featured

    மோடி ஆட்சியில் கைரேகை திருட்டு –  காங்கிரஸ் கடும் விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 congress
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்கு திருட்டு, தொகுதி திருட்டு, நன்கொடை திருட்டைத் தொடர்ந்து தற்போது கைரேகை  திருட்டிலும் பிரதமர் மோடி ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பியுமான  ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில் இந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

    அவரது சமூக வலைத்தளப் பதிவில், வாக்கு திருட்டு, தொகுதி திருட்டு, நன்கொடை திருட்டு… இப்போது ‘கைரேகை திருட்டு’! மோடி ஆட்சியில் எந்த வகையான திருட்டும், கொள்ளையும் சாத்தியமே எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தின் சிங்ரௌலி மாவட்டத்தில் உள்ள கிரோலி (Ghirouli) நிலக்கரி சுரங்கப் பகுதியில், அதானி குழுமத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்துக்காக சுரங்கத் தோண்டலுக்கு வழிவகுக்கும் வகையில், இறந்தவர்களின் கைரேகைகளை பயன்படுத்தி போலி கிராம சபை ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பழங்குடியின மக்களின் உரிமைகளை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக பறிக்க மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

    இன்று, காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ‘சிங்ரௌலி ஃபைல்ஸ்’ (Singrauli Files) குறித்த செய்தியாளர் சந்திப்பில், கே. ராஜு மற்றும் டாக்டர் விக்ராந்த் பூரியா இந்த பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    அதானி குழுமத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் நிலக்கரிச் சுரங்க திட்டங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துதல் மற்றும் அங்கீராமற்ற செயல்முறைகளில் போலி கைரேகைகள் பயன்படுத்தப்பட்டதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    கிராமப்புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத அல்லது வெளியூர்களில் பணிபுரியும் மக்களின் கைரேகைகளைப் பெறுவதில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் உள்ளன.

    நில உரிமையாளர்களின் பெயரில் போலியான ‘விற்பனை ஒப்பந்தங்கள்’ (Sale Deeds) அல்லது ‘ஒப்புதல் கடிதங்கள்’ உருவாக்கப்பட்டு, அவற்றில் போலி கைரேகைகள் பதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

    congress Fingerprint Fraud modi government Narendra Modi Thumb Impression Fraud
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியை புரட்டியெடுக்கும் கனமழை..!! ஆறுகளாக மாறிய சாலைகள்.. தவிக்கும் மக்கள்..!!
    Next Article ‘விடியல்’ நீக்கம்.. மகளிர் பயணத் திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டிய தவெக அரசு!
    Editor TN Talks

    Related Posts

    ஆழ்கடலில் நிலையான மீன்பிடிப்புக்கான தேசிய திட்டம் ; துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

    July 9, 2026

    வாட்ஸ்அப் ‘Username’ விவகாரம்!. பதிலளிக்காத மெட்டா நிறுவனம்!.

    July 9, 2026

    சீனாவையே சார்ந்திருக்கும் இந்தியா –  எங்கே போனது மோடியின் தன்னிறைவு இந்தியா?  – காங்கிரஸ் கேள்வி

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆழ்கடலில் நிலையான மீன்பிடிப்புக்கான தேசிய திட்டம் ; துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

    வாட்ஸ்அப் ‘Username’ விவகாரம்!. பதிலளிக்காத மெட்டா நிறுவனம்!.

    சீனாவையே சார்ந்திருக்கும் இந்தியா –  எங்கே போனது மோடியின் தன்னிறைவு இந்தியா?  – காங்கிரஸ் கேள்வி

    மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகஸ்ட் 15-க்குள் திறப்பா?  – உயர்நீதிமன்றம் கேள்வி

    அமோனியா கசிவு எதிரொலி..!! மின்சாரம் துண்டிப்பு.. தொழிற்சாலைக்கு ‘சீல்’..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.