தன்னைப் பற்றி வெளியாகும் வதந்திகளை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது என நடிகை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான கார்டியன் என்ற ஹாரர் திரைப்படம் பெரிய அளவில் ஓடவில்லை. தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வந்தாலும், முன்பு இருந்ததைப் போன்ற வெற்றி படங்களை அவரால் கொடுக்க முடியவில்லை.
இதற்கிடையில் சினிமாவில் உட்சத்தில் இருந்தப் போது சோகைல் கதுரியா என்பவரை காதலித்து 2022-ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் நடித்தும் வருகிறார் ஹன்சிகா. இந்த நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக ஹன்சிகா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் செய்திகள் வெளியானது.
ஏற்கனவே சோகைல் ஹன்சிகாவின் தோழியை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ளார் ஹன்சிகா. அதாவது, ”என் வாழ்க்கையைப் பற்றிய மக்களின் கருத்துக்களை நான் படிக்கும் போது சிரிப்பாக வருகிறது” என்பது போன்று ஒரு எமோஜியை ஹன்சிகா பகிர்ந்துள்ளார்.
தற்போது விடுமுறையை கொண்டாடுவதற்காக பாலி சென்றுள்ள ஹன்சிகா அங்கு எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.