கரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் முப்பெரும் விழாவின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
அண்மையில் ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் கட்சி நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறர்.
திமுகவின் முப்பெரும் விழா குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சர் தலைமையில் இன்று மதியம் 12 மணிக்கு காணொலி காட்சி மூலம் திமுகவின் மாவட்ட செயலாலர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி திமுகவில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட செயலாளர்களின் கட்சி பணிகள், தேர்தல் பணிகள், தொகுதி நிலவரம் குறித்து முதலமைச்சர் கேட்க உள்ளார் என கூறப்படுகிறது.