Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வடபழனி முருகன் கோயில் வாகன நிறுத்துமிட வழக்கு.. இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு..
    தமிழ்நாடு

    வடபழனி முருகன் கோயில் வாகன நிறுத்துமிட வழக்கு.. இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு..

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vadapalani murugan temple
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டுவதை எதிர்த்த மனு மீது இந்து சமய அறநிலையத்துறை விசாரணை செய்து தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முருக பக்தரான வி.பாண்டியராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை வடபழனி முருகன் கோவிலில், வள்ளி திருமண மண்டபம் அருகே புதிதாக திருமண மண்டபம் கட்டுவதற்கும், தெய்வானை திருமண மண்டபம் அருகே பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கும் இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    கோவிலில் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடத்தப்பட்டதால், அப்பகுதி மிகவும் நெரிசலாகி, பக்தர்கள், பொதுமக்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் என அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தியதால், கோவிலுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வாகன நிறுத்துமிடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், இந்த இரு மண்டப வளாகங்களில் 300 நான்கு சக்கர வாகனங்களையும், 500 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்துக்கூடிய சூழல் உள்ளபோது, புதிதாக திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டால், மீண்டும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    பக்தர்களிடமிருந்து நன்கொடையாக வசூலிக்கப்படும் நிதி தேவையற்ற நோக்கங்களுக்காக வீணடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், புதிய கட்டுமானங்களுக்கான முடிவுகளை கைவிடக் கோரி கடந்த மார்ச் மாதம் அளித்த மனுவை பரிசீலிக்காததால், அதை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி. அருளமுருகன் ஆகியோர், மனுதாரரின் புகார் மீது கடந்த மே மாதம் விசாரணை தொடங்கப்பட்டு அதற்கு மனுதாரரையும் அழைத்துள்ள நிலையில், கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறமுடியாது என தெளிவுபடுத்தி உள்ளனர்.

    எனவே மேற்கொண்டு இந்த வழக்கை நிலுவையில் வைத்திருக்க அவசியம் இல்லை என்பதால், வழக்கை முடித்து வைப்பதாக கூறிய நீதிபதிகள், மனுதாரரின் புகாரை வடபழனி முருகன் கோவில் செயல் அலுவலர் முறையாக விசாரித்து, மூன்று வாரங்களுக்குள் இந்துசமய அறநிலையத் துறை ஆணையரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையைப் பொறுத்து, தேவைப்பட்டால் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇமானுவேல் சேகரன் குருபூஜை – வழக்கு முடித்து வைப்பு
    Next Article அண்ணாமலை சொன்ன குட்டிக்கதை…
    Editor TN Talks

    Related Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.