Close Menu
    What's Hot

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதிமொழி ஏற்ற முதலமைச்சர்
    அரசியல்

    “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதிமொழி ஏற்ற முதலமைச்சர்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 15, 2025Updated:September 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 09 15 at 10.55.31 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதி ஏற்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் திமுக தலைவரும், தமிழ்நாடு  முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள  பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்குக் கீழ் வைக்கப்பட்ட அண்ணா அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், மாதவரம் சுதர்சனம், வேற்றியழகன் உள்ளிட்டோர், மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இதில் “நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    நான், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்” என உறுதிமொழி ஏற்றனர்.

    anna cm stalin MK Stalin stalin ஓரணியில் தமிழ்நாடு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்றுடன் முடியும் 10 நாள் கெடு- மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்
    Next Article தவெக தலைவர் விஜய்க்கு சில கேள்விகள்..!
    Editor TN Talks

    Related Posts

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    June 1, 2026

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    June 1, 2026

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    Trending Posts

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.