3,60,000 மேற்பட்டோர் நாய் கடியால் பாதித்து உள்ளதாகவும் தமிழக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 3,60,000 மேற்பட்டோர் நாய் கடியால் பாதித்து உள்ளதா நிலையில், இதுவரை 22 பேர் ரேப்பிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது
குறிப்பாக, தமிழகத்தில், தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன
இதனால், ஏற்படும் ரேபிஸ் தொற்றில் இருந்து, செல்ல பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு தடுப்பூசி தீர்வாக உள்ளது
நாய்க்குட்டி பிறந்த முதலாண்டில், இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும் ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும், தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை
இவ்வாறு தடுப்பூசி போடாத நாய்கள், மனிதர்களை கடிக்கும் போது, ரேபிஸ் தொற்று பரவி, இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது
தமிழகத்தில் 2336 அரசு ஆரம்ப சுகாதார, அரசு பொது மருத்துவமனைகள் மாவட்ட தலைமை பொது மருத்துவமனைகள் நகரப்புற மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசிகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இருபில் உள்ளன
இந்த நிலையில் கடந்த 8 மாதங்களில் ராபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்ததாகவும், 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதித்துள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
நாய் கடி தடுப்பதற்கும் நாய் இனப்பெருக்கத்தை குறைப்பதற்கும் தொடர்ந்து பொது சுகாதாரத் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..