Close Menu
    What's Hot

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»காதலன் துடிதுடிக்க வெட்டிக் கொலை – மீண்டும் ஒரு ஆணவக் கொலையா?
    தமிழ்நாடு

    காதலன் துடிதுடிக்க வெட்டிக் கொலை – மீண்டும் ஒரு ஆணவக் கொலையா?

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mayiladuthurai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மயிலாடுதுறை அருகே 10 வருட காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார் காதலனை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதியில் பெரியகுளம் அருகே உள்ள பக்கத்து தெருவில் (காலணி தெரு) வசிக்கும் குமார் என்பவரின் மகளான மாலினி என்ற பெண்ணை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த மாலினி சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

    வைரமுத்துவின் காதலுக்கு மாலினி வீட்டார் எதிருப்பு தெரிவித்து வந்ததால்  இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வைரமுத்துவிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாலினியின் குடும்பத்தார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மாலினி வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதால் மாலினியின் குடும்பத்தார் அவரை நிராகரித்துள்ளனர்.

    போலீஸ் விசாரணைக்கு பிறகு வைரமுத்துவின் வீட்டிற்கு மாலினி சென்ற நிலையில் இருவருக்கும் பதிவு திருமணம் செய்து வைக்க வைரமுத்துவின் பெற்றோர் முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வேலைக்காக மாலினி சென்னைக்கு சென்ற நிலையில் நேற்றிரவு வீட்டிற்கு வந்த வைரமுத்துவை வழிமறித்த மர்மநபர்கள்  ஓட ஓட விரட்டிச் சென்று சராமாரியாக அறிவாளால் வெட்டியுள்ளனர். கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வெட்டிக்காயம் ஏற்பட்ட வைரமுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொணார்.

    வைரமுத்துவின் காதலுக்கு மாலதி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆணவ கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    honour killing lover murder Mayiladuthurai murder
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடி டெல்லி சென்றாலே பயந்து நடுங்கும் திமுக – அதிமுக ஐடி விங்
    Next Article ஆணவ படுகொலைக்கு நீதி வேண்டும் – போராட்டத்தில் குதித்த விசிக, மார்க்சிஸ்ட்
    Editor TN Talks

    Related Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    July 21, 2026

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.