Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»‘நகைச்சுவை உணர்வால் தனி இடத்தை உருவாக்கியவர்’ – ரோபோ சங்கர் மறைவிற்கு விஜய் இரங்கல்
    சினிமா

    ‘நகைச்சுவை உணர்வால் தனி இடத்தை உருவாக்கியவர்’ – ரோபோ சங்கர் மறைவிற்கு விஜய் இரங்கல்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 19, 2025Updated:September 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Robo Shankar and Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் என்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சின்னத்திரையில், காமெடி பேச்சாளராக ஜொலித்தவர் ரோபோ சங்கர். தனது திறமையாலும், அயராத முயற்சியாலும் வெள்ளித்திரையிலும் காமெடி நடிகராக வலம் வந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், சமீபகாலமாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார்.

    தொடர்ந்து, திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், உணவுக்குழாய் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், நேற்றிரவு காலமானார். ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், ரோபோ சங்கர் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.

    நண்பர் ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    Condolences death robo shankar TVK Vijay இரங்கல் தவெக மரணம் ரோபோ சங்கர் விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு தாக்கல்.
    Next Article வரலாறு படைக்குமா ஓமன்?… பலம் வாய்ந்த இந்தியாவுடன் பலப்பரீட்சை…
    Editor TN Talks

    Related Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.