Close Menu
    What's Hot

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறாரா விஜய்?… பாதுகாப்பு கோரி விஜய் தரப்பில் மனு…
    தமிழ்நாடு

    பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறாரா விஜய்?… பாதுகாப்பு கோரி விஜய் தரப்பில் மனு…

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 29, 2025Updated:September 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay Karur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதற்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்று தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் 3ஆம் கட்ட பயணமாக நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்து இருந்தார்.

    விபத்து தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில், தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து, தனது சொந்த காரில், பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார். ஏறக்குறைய 34 மணி நேரத்திற்கு பிறகு தனது இல்லத்தை விட்டு வெளியே வருவது குறிப்பிடத்தக்கது.

    அங்கு கரூர் கொடுந்துயர் விபத்து குறித்தும், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் தனது இல்லத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் காணொளி வாயிலாக இணைந்துள்ளதாகவும், கரூர் விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஒருநபர் ஆணையம் குறித்தும், தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால், மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களிடம் விஜய் கேட்டு அறிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    40 மணி நேரம் ஆகியும் கட்சித் தலைவர் என்ற முறையில், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல், தானும் தனது கட்சி நிர்வாகிகளும் வழக்கில் இருந்து தப்புவது குறித்து ஆலோசிப்பது ஏன் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் சிகிச்சைப் பெற்றவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திக்க உள்ளதாக தெரிகிறது. விஜய்யின் இந்த சந்திப்பதற்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்று தவெக தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக தரப்பில் ஆதவ் அர்ஜுனா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    Campaign Cunsult death Karur namakkal Rally TVK Vijay ஆலோசனை உயிரிழப்பு கரூர் தவெக நாமக்கல் பிரசாரம் பொதுக்கூட்டம் விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகைது நடவடிக்கையில் தப்ப முயற்சியா?… மூத்த வழக்கறிஞர்களுடன் விஜய் ஆலோசனை
    Next Article வீட்டை விட்டு வெளியே வரும் விஜய் – எங்கே செல்கிறார் தெரியுமா?
    Editor TN Talks

    Related Posts

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    June 15, 2026

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    June 15, 2026

    காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்!

    அடம் பிடிக்கும் இஸ்ரேல்… கேள்விக்குறியாகும் உலக அமைதி… என்னவாகும் போர் நிறுத்த ஒப்பந்தம்?  

    அமைதி ஒப்பந்தம்!. உலகக்கோப்பைக்காக அமெரிக்கா சென்ற ஈரான்!. சவால்களும்.. எதிர்பார்ப்புகளும்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.