Close Menu
    What's Hot

    “ருதுராஜ் சொல்வதை ஏற்க முடியாது!” சிஎஸ்கே-வின் பலவீனம் குறித்து பேசிய அஸ்வின்!

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் உறுதிமொழி
    தமிழ்நாடு

    அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் உறுதிமொழி

    Editor TN TalksBy Editor TN TalksOctober 2, 2025Updated:October 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin Gandhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேசப்பிதாவை கொன்றொழித்த இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சுதந்திர இந்தியா பிறப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மகாத்மா காந்தி. அஹிம்சை, அறவழியை உலகிற்கு போதித்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருங்காட்சிய வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்நிலையில், தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!

    மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.

    நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!” என்று தெரிவித்துள்ளார்.

    M.k. stalin Mahatma Gandhi Postal stamp RSS Movement அஞ்சல் தலை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மகாத்மா காந்தி மு. க. ஸ்டாலின்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசைபர் குற்றங்கள் 283% அதிகரிப்பு; திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
    Next Article சிராஜ், பும்ரா வேகத்தில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ் – 162 ரன்களுக்குள் சுருட்டியது இந்தியா
    Editor TN Talks

    Related Posts

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026

    “தனியா போக மாட்டேன்” விஜய்யால் கடுப்பாகும் மூத்த நிர்வாகிகள்!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ருதுராஜ் சொல்வதை ஏற்க முடியாது!” சிஎஸ்கே-வின் பலவீனம் குறித்து பேசிய அஸ்வின்!

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    “தனியா போக மாட்டேன்” விஜய்யால் கடுப்பாகும் மூத்த நிர்வாகிகள்!

    Trending Posts

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    “ருதுராஜ் சொல்வதை ஏற்க முடியாது!” சிஎஸ்கே-வின் பலவீனம் குறித்து பேசிய அஸ்வின்!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.