Close Menu
    What's Hot

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்..!! மலர்தூவி அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    அன்று ரீல் அண்ணாமலை – இன்று ரியல் அண்ணாமலை – ரஜினி ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்

    அரசுப் பாதுகாப்பு இருக்கும்போது முதல்வருக்கு தனிப்பட்ட பாதுகாவலர் ஏன்?. அதிமுக இன்பதுரை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»இறந்தவர்களின் குடும்பத்தினருடன் சந்திப்பு?… மா.செ.-க்களை தொடர்பு கொண்ட விஜய்…
    அரசியல்

    இறந்தவர்களின் குடும்பத்தினருடன் சந்திப்பு?… மா.செ.-க்களை தொடர்பு கொண்ட விஜய்…

    Editor TN TalksBy Editor TN TalksOctober 3, 2025Updated:October 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay Karur Stampede
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரையும், சிகிச்சையில் இருந்து மீண்டவர்களையும் விஜய் விரைவில் சந்திக்க ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். புஸ்ஸி ஆனந்த், மற்றும் சி.டி.குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

    இந்நிலையில் தவெக தலைவர் விஜய், மாவட்ட செயலாளர்களை வாட்ஸ்அப் கால் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதேபோல, 15 மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விஜய் விரைவில் கரூர் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரையும், சிகிச்சையில் இருந்து மீண்டவர்களையும் சந்திக்க ஏற்பாடுகளை செய்யுங்கள், என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக பதிவு போடுபவர்கள் மீது வழக்கு பதியப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

    வழக்கமாக மாவட்ட செயலாளர்களிடம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொதுச் செயலாளர் ஆனந்த் தான் பேசுவார். ,ஆனால் தற்போது விஜய் மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசியுள்ளார்.

    accident District Secretaries karur stampede TVK Vijay WhatsApp call கரூர் கூட்டநெரிசல் தவெக மாவட்டச் செயலாளர்கள் வாட்ஸ்ஆப் அழைப்பு விபத்து விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் துயரம்: சரியான பதிலை எதிர்பார்க்கிறேன் – முதல்வருக்கு அனுராக் சிங் தாக்கூர் கடிதம்
    Next Article ‘நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது’ – கரூர் விவகாரத்தில் நீதிபதி காட்டம்
    Editor TN Talks

    Related Posts

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்..!! மலர்தூவி அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    June 3, 2026

    அன்று ரீல் அண்ணாமலை – இன்று ரியல் அண்ணாமலை – ரஜினி ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்

    June 3, 2026

    அரசுப் பாதுகாப்பு இருக்கும்போது முதல்வருக்கு தனிப்பட்ட பாதுகாவலர் ஏன்?. அதிமுக இன்பதுரை!.

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்..!! மலர்தூவி அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    அன்று ரீல் அண்ணாமலை – இன்று ரியல் அண்ணாமலை – ரஜினி ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்

    அரசுப் பாதுகாப்பு இருக்கும்போது முதல்வருக்கு தனிப்பட்ட பாதுகாவலர் ஏன்?. அதிமுக இன்பதுரை!.

    இஸ்லாமிய சமுதாயம் ஏற்றம் பெற பங்காற்றியவர் கலைஞர் கருணாநிதி – புழல் ஷேக் முகம்மது அலி நெகிழ்ச்சி

    முதல்வருக்கு மகளின் திருமண அழைப்பிதழ் தந்த சுந்தர் சி- குஷ்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.