Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ’டாப்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
    தமிழ்நாடு

    இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ’டாப்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

    Editor TN TalksBy Editor TN TalksOctober 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாகவும், இந்தியாவிலேயே 11.19% பொருளாதார வளர்ச்சியோடு இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) சார்பில் இன்று முதல் 3 நாட்கள் வரை நடைபெறும் “AeroDefCon25” கண்காட்சி மற்றும் கருத்தரங்கை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறை சார்ந்த இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் முதல்முறையாக தொடங்கி வைத்துள்ளதாகவும், அனைத்து விதமான வளர்ந்து வரும் தொழில்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் அடையாளம் தான் இந்த மாநாடு.

    மின்னணு பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக கூறிய அவர், இந்தியாவிலேயே 11.19% பொருளாதார வளர்ச்சியோடு இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் துறை இடம்பெற்றிருக்கும் நகரங்களில் பல தொழில் தொடங்கப்பட்டுள்ளது. சூலூரில் 200 ஏக்கரில் வாண்வெளி பூங்கா அமைக்கப்பட்டு வருவதோடு, சென்னைக்கு அருகில் வள்ளம் வடகாலில் aerohub திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது.

    தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தட திட்டத்தை தொடங்கியதில் இருந்து சுமார் 23 ஆயிரம் கோடி முதலீட்டுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதில், சுமார் 5 ஆயிரம் கோடி முதலீடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளது, 2032-ஆம் ஆண்டிற்குள் 75,000 கோடி ரூபாய் இலக்கை அடைய தமிழ்நாடு முன்னேறி வருகிறது.

    தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீட்டுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. இந்திய தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் திறமையான இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர், பன்னாட்டு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய காத்திருக்க வேண்டியதில்லை” என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா, தொழில்துறை செயலாளர், TIDCO நிர்வாக இயக்குனர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    Economic Growth Electronic goods M.k. stalin TIDCO டிட்கோ தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் பொருளாதார வளர்ச்சி மின்னணு பொருட்கள் மு. க. ஸ்டாலின்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் சம்பவத்திற்கு யார் பொறுப்பு? – கமல்ஹாசன் கொடுத்த புது விளக்கம்
    Next Article வீடியோ காலில் ஆறுதல் சொன்ன விஜய்! – புகைப்படம், வீடியோ வேண்டாம் என வேண்டுகோள்
    Editor TN Talks

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.