Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»‘நீதிமன்றத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது’ – கரூர் கூட்டநெரிசல் வழக்கில் வழக்கறிஞர் மனு
    தமிழ்நாடு

    ‘நீதிமன்றத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது’ – கரூர் கூட்டநெரிசல் வழக்கில் வழக்கறிஞர் மனு

    Editor TN TalksBy Editor TN TalksOctober 8, 2025Updated:October 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay Karur Stampede 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூரில் துயர சம்பவம் தொடர்பான வழக்கில், கற்பனையான நபரின் பெயரில் நீதிமன்றத்தில் மோசடி செய்து உத்தரவு பெறப்பட்டுள்ளதாக, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டி விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, அக்டோபர் 3ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அதிகார வரம்புக்குட்பட்ட இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், “வழக்கை தாக்கல் செய்த தினேஷ், வில்லிவாக்கத்தில் பாபுநகர் என்னுமிடத்தில் வசிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அதுபோல எந்த நகரும் இல்லை. கற்பனையான நபரின் பெயரில் நீதிமன்றத்தில் மோசடி செய்து இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது.

    கரூர் காவல்நிலையம், உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதை மறைத்து, அதிகார வரம்பு இல்லாத சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், கரூர் துயர சம்பவம் தொடர்பாக, அக்டோபர் 3ஆம் தேதி இரு நீதிபதிகள் அமர்வில் முறையீடு செய்யப்பட்ட போது, மதுரை அமர்வை அணுகும்படி அறிவுறுத்தப்பட்டதை, அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள், வேண்டுமென்றே தனி நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

    தவிர, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத நபருக்கு (விஜய்யை) எதிராக கடுமையான கருத்துக்களும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் மோசடி செய்து பெறப்பட்ட இந்த உத்தரவை திரும்பப் பெறுவதுடன், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய மனுதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    case Court Forgery fraud Guidlines Karur Stamppede TVK Vijay கரூர் கூட்டநெரிசல் தவெக நீதிமன்றம் போலி மோசடி வழக்கு வழிகாட்டி நெறிமுறைகள் விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅந்தரங்க வீடியோக்களை டெலிட் செய்ய நடவடிக்கை – மத்திய அரசு
    Next Article பாஜகவால் விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலை இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை – ம.நீ.ம கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.