Close Menu
    What's Hot

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»பாஜகவால் விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலை இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை – ம.நீ.ம கண்டனம்
    அரசியல்

    பாஜகவால் விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலை இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை – ம.நீ.ம கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksOctober 8, 2025Updated:October 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kamal Haasan and Annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரும், மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப்பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளை தரம் பார்க்காமல் எல்லோர்மீதும் கொட்டுவதும் வழக்கமாக கொண்ட, பாஜகவாலேயே புறக்கணிக்கப்பட்ட மாஜி அண்ணாமலை, இன்று எங்கள் தலைவரைப்பற்றி, ஒரு ராஜ்யசபா சீட்டிற்காக தன் ஆன்மாவை விற்றுவிட்டவர் என்று கூறியுள்ளார்.

    ஆட்களையும், கட்சிகளையும் விலைக்கு வாங்கும் பழக்கமுள்ள பாஜகவும், அந்தக்கட்சியால் காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படி பேசுவது ஆச்சர்யமில்லை.

    உலகம் புகழும் மாபெரும் கலைஞர், இந்திய அரசின் வருமானத் துறையாலேயே நேர்மையாளர் பட்டம் பெற்றவர், 7 ஆண்டுகள் மய்யம் என்ற புதிய சித்தாந்ததோடு கட்சி நடத்தி வருபவர், பல்துறை வித்தகர் எங்கள் தலைவர்.

    அவர் ஏற்றுக்கொண்டதால் அந்த எம்.பி., பதவிதான் கவுரவம் பெற்றதேயோழிய அவர் தகுதிக்கு இந்தப்பதவி சாதாரணம். மக்கள் பிரச்சினைகளை உரிய இடத்தில் பேச ஒரு வாய்ப்பாக எம்.பி., பதவியை எங்கள் தலைவர் பார்க்கிறாரே தவிர அதை தனக்கான கிரீடமாக பார்க்கவில்லை.

    அவர் எந்தவொரு பதவியில் இல்லாவிட்டாலும், அவர் குரலை இந்தியா திரும்பிப் பார்க்கும் உங்கள் தலைவர்கள் உட்பட. ஆனால் உம்முடைய குரல் வெறும் ஊடகத் தீனிதான் என்பதை நீர் உணரவேண்டும் அண்ணாமலை அவர்களே.

    நடந்த சோக நிகழ்வுக்கு யார் பொறுப்பு என்று ஊடகம் கேட்கும்போது, நாம் எல்லோரும்தான் பொறுப்பு என்று கூறியவர் எங்கள் தலைவர். அவரின் நடுநிலையான பேச்சு உங்களைப் போன்ற என்டெர்டெய்னர்களுக்கு புரியாது” என்று தெரிவித்துள்ளார்.

    Annamalai Kamal Haasan karur stampede Makkal Needhi Maiam Murali Appas அண்ணாமலை கமல்ஹாசன் கரூர் கூட்டநெரிசல் மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘நீதிமன்றத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது’ – கரூர் கூட்டநெரிசல் வழக்கில் வழக்கறிஞர் மனு
    Next Article திமுக மாவட்ட, நகர செயலாளர்கள் மாற்றம்! – உடன்பிறப்பே வா மூலம் அதிரடி நடவடிக்கை
    Editor TN Talks

    Related Posts

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    July 16, 2026

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    July 16, 2026

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.